செவ்வாய், 9 செப்டம்பர், 2014

இரண்டாம் திருமுறை 
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
065 திருப்பிரமபுரம்

 

 


பாடல் எண் : 9
பண் : காந்தாரம்

அடிமுடி மாலயன் றேட வன்று மளப்பிலர் போலுங்
கடிமல ரைங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கட லீந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரம புரமமர்ந் தாரே.
  
பெண்யானை போன்ற நடையினை உடைய மாதர்கள் பெருகிய பிரமபுரம் அமர்ந்த பெருமான், அன்று திருமால் பிரமர்கள் அடிமுடிதேடி அளக்கலாகாத திருவுருவம் கொண்டவர். மணம் கமழும் மலர்கள் ஐந்தினைக் கணைகளாகக் கொண்ட மன்மதன் எரியுமாறு விழித்தவர். மண்ணுலகில் தந்தையிடம் பால்கேட்ட மலர்போன்ற மென்மையான இளம் பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தவர்.
 குறிப்புரை :


     9. பொ-ரை: பெண்யானை போன்ற நடையினை உடைய 
மாதர்கள் பெருகிய பிரமபுரம் அமர்ந்த பெருமான், அன்று திருமால் 
பிரமர்கள் அடிமுடிதேடி அளக்கலாகாத திருவுருவம் கொண்டவர். மணம் 
கமழும் மலர்கள் ஐந்தினைக் கணைகளாகக் கொண்ட மன்மதன் எரியுமாறு 
விழித்தவர். மண்ணுலகில் தந்தையிடம் பால்கேட்ட மலர்போன்ற மென்மையான இளம் பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தவர்.
     கு-ரை: கடி - மணம். மலர் ஐங்கணை - ஐந்து பூங்கணை. வேள் - 
(
கரு) வேள்; மன்மதன். கனல - தீப்பொறி பறக்க. பாலன் - உபமன்யு 
முனிவர். ‘பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடலீந்த பிரான்’. 
பிடி - பெண்யானை.
7. திருப்பாற்கடல் :
வசிஷ்டர் தன் குடும்பத்துடன் திருக்களாஞ்செடிகள் சூழ்ந்த சிங்காரத்தோப்பில், தவம் செய்து கொண்டிருக்கின்றார்.
தம்மை வந்து தரிசித்த பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளைக் கண்டு மகிழ்ந்தார்.
வியாக்ரபாதரின் தவ சிரேஷ்டத்தைக் கண்டு வியப்புற்று, தன்னுடன் அழைத்து வந்திருந்த தன் தங்கையை, வியாக்ரபாதருக்கு மணம் முடித்து வைத்தார்.
வசிஷ்டரின் தங்கையும், வியாக்ரபாதரும் - தம்பதி சமேதராக நடராஜப் பெருமானை வழிபட்டுவந்தனர். இருவரின் குடும்ப வாழ்க்கைக்குச் சான்றாக சூரியனையொத்த பிரகாசத்துடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு உபமன்யு என்று பெயரிட்டனர்.
உபமன்யு, வசிஷ்டரின் ஆசிரமத்தில், அருந்ததியின் அரவணைப்பில், தெய்வப்பசுவாகிய காமதேனுவின் பால் அருந்திக் கொண்டு, வனப்புடன் வளர்ந்துவந்தான்.https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFx5lUbao7EpS_s7LrRVi4s8m3CFO0RTjEyoJ-PRQXG8zntjMZo8R-UNEe4_sb4wDydE1aeRdaZTagN7zbFGntKcPN-TPKguHiaXGKQmjcypXgSwZfZ8eaJPuhCMJRGXt2-RT7ZbO6F7WN/s320/kamadhenu.JPG
சில காலம் சென்று, உபமன்யுவையும் அவன் தாயையும் அருந்ததி, வியாக்ரபாதரின் இல்லம் கொண்டு சேர்ப்பிக்கின்றாள்.
இங்கு வந்த குழைந்தைக்கு வியாக்ரபாதர் தனது ஆசிரமத்திலிருந்த பசுவின் பால் தர, தெய்வப்பசுவாகிய காமதேனுவின் சுவைமிக்க பால் அருந்திய அந்த பாலகன், வியாக்ரபாதர் தந்த பாலைத் துப்பிவிட்டு, காமதேனுவின் பால் தான் வேண்டும் என அடம்பிடித்து, பசியால் துடிக்க, செய்வதறியாது திகைத்த வியாக்ரபாதர் நடராஜரை வேண்ட, தன் பக்தனின் துயர் துடைக்க, குழந்தை குடிப்பதற்காக பால் அலையென அடித்துவரும் வகையில் பாற்கடலையே உண்டாக்கினார்.https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDnWhXCyspGxR_1bHwzFZ7OTisOLVu9GqQKCAiB3DkA-PlV6oNMTfCOCnMvgfW0UJK9bgaKZvBcClYeT0k8yYVqckNKAZMbaOERZ-gsiL2jnQV1hbYpCMWGMIJPJXagr5aD0Yl7ifojMQC/s320/upamanyu.jpgஅதை உண்ட உபமன்யு, திருப்தியடைந்து, தந்தையிடம் பாடங்கள் பயின்று பெரும் ஞானியானார்.

உபமன்யு, கிருஷ்ணருக்கு பஞ்சாக்ஷர உபதேசம் செய்வித்து, கிருஷ்ணருக்கு ஏற்பட்ட தோஷங்களை நீங்கச் செய்தார். இவரின் சரிதத்தை சிவரஹஸ்யம் மிக விரிவாக விளக்குகின்றது.
பாலுக்குப் பாலகன் வேண்டியதிடப் பாற்கடல் ஈந்த பிரான் - என்று திருப்பல்லாண்டிலும், அப்பர் தேவாரத்திலும் இச்சம்பவம் இடம்பெறுகின்றது.

நடராஜரால் ஏற்படுத்தப்பட்ட திருப்பாற்கடல், கோயில் வடதிசையில் அமைந்திருக்கின்றது.
தி .9 திருப்பல்லாண்டு -9).

 

பாடல் எண் : 6

ஆவின் பால்கண் டளவி லருந்தவப்
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத் தொழவினை வீடுமே.
பொழிப்புரை :
பசுவின் பாலை முன் உண்டமையால் , மிக்க அருந்தவம் உடைய பாலனாகிய உபமன்யு அப்பால் வேண்டலும் , ` செல்க ` என்று பாற்கடலைக் கூவி அருளியவனும் குளிர் பொழில் களையுடைய கோளிலியில் விரும்பி உறைபவனுமாகிய பெருமானைத் தொழ நம் வினைகள் வீடும் . ` பெருமானது அளவில் ஆற்றலும் பேரருளுடைமையும் ` குறித்தபடி .
குறிப்புரை :
ஆவின்பால் கண்டு - காமதேனுவின் பாலை முன் உண்டு அறிந்தமையால் , அளவில் அருந்தவப் பாலன் - அளவற்ற அரிய தவத்தை உடைய குழந்தை உபமன்யு . வேண்டலும் - விரும்பி அழுதலும் . செல்லென்று - உபமன்யுவை நோக்கிச் செல்வாயாக என்று . கூவினான் - அழைத்து ஏவல் செய்தான் . வீடும் - அழியும் . உபமன்யு தாய்மாமன் வசிட்டனிடத்து வளர்ந்தபோது உண்டது காமதேநுவின்பால் , தந்தை வியாக்கிர பாதரிடம் வந்தபோது அது கிடைக்காமையால் அது வேண்டி அழுதார் . ` பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் ` ( தி .9 திருப்பல்லாண்டு -9).
107. திருக்கடவர்வீரட்டம் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்)
1021. பாலனுக்காய்அன்று பாற்கடல்
ஈந்து பணைத் தெழுந்த
ஆலினிற் கீழ்இருந்து ஆரணம்
ஓதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமும் கொண்டு
தொடர்ந்தடர்ந்து ஓடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட
வூர்உறை உத்தமனே.
தெளிவுரை : ஈசன், உபமன்யு முனிவர் பாலுக்காக அழுதபோது, பாற்கடல் ஈந்தவர்; கல்லால மர நிழலில் இருந்து, சனகாதி முனிவர்களுக்கு வேதப் பொருளை ஓதி அருளியவர்; மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சூலமும் பாசமும் கொண் பின் தொடர்ந்து அடர்ந்து வந்த காலனை அழித்தவர். அவர், கடவூரில் உறையும் உத்தமனே

உபமன்யு மகரிஷி வரலாறு

postdateiconFriday, 22 April 2011 06:36 | postauthoriconWritten by M Saravanan | PDF | Print | E-mail

 உபமன்யு மகரிஷி  வரலாறு :-
           
வியாக்ரபாத மகரிஷியின் குமாரர் என்பது ஆதித்ய புராணம்.த்ருமன்யு என்பவரின் புத்திரர் என்பது சிவ ரகஸ்யத்தின் கருத்து.இவர் பிறந்த பின் தாய்ப்பால் இன்மையால் அரிசி மாவினைச் சர்க்கரை கலந்து ஐந்து வயது வரை ஊட்டினாள் தாய். இவரின் தாய் இவரை எடுத்துக் கொண்டு தன் சகோதரராகிய வசிஷ்ட முனிவர் ஆசிரமம் சென்றாள். அங்கு வசிஷ்டரின் பத்தினியான அருந்ததி தேவியார் ஓமம் செய்து மீதம் இருந்த காமதேனுவின் பாலைத்தர,அதனை ஒருமாதம் வரை உண்டு வளர்ந்தார்.
                  பின் அன்னை,மகனுடன் தம் ஆசிரமம் சென்றாள். அங்கு பழையபடி அரிசிமாவும், சர்க்கரையும் கரைத்துக் கொடுக்க, "அது வேண்டாம்.காமதேனுவின் பாலே வேண்டும்'' என அழ,  பூர்வத்தில் சிவபூசனை செய்தவர்க்கே அது கிடைக்கும் எனத் தாய் சொன்னாள்.
                 பின் தம் தந்தையிடம் தீட்சை பெற்றுத் திரிகூட மலையில் தவம் மேற்கொண்டார். சிவபிரான் இவருக்குக் காட்சி தந்து பாற்கடலை இவருக்குத் தந்தார்.
                 ஒருமுறை இவர் அதிதிகளுக்கு உணவு படைத்து அந்தப் பரிகலத்தை வெளியில் எறிந்தார். அந்த எச்சம் அங்கு சாபத்தினால் பல்லி உருக்கொண்டு இருந்த தம்பதியர் இருவர் தலையில் பட தலை பொன்னுருவம் அடைந்தது. பூர்வ ஞானம் பெற்ற இருவரும் உபமன்யு முனிவரைத் துதித்து அவரால் தீர்த்த யாத்திரை செய்து சாப விமோசனம் பெற்றனர்.
                     மரீசி முனிவரால் பேயுரு அடையுமாறு சில முனி குமாரர்கள் சாபம் பெற்றிருந்தனர். அவர்கள் உபமன்யு முனிவரின் தவத்தைக் கெடுக்க வர, பஞ்சாட்சர மந்திரம் ஜெபித்து அவர்களின் பேயுருவை ஒழித்தார்.
                  இவரைச் சோதிக்க எண்ணிய சிவபிரான், இந்திரன் உருக்கொண்டு வந்து சிவ நிந்தனை செய்ய அகோராஸ்திர மந்திரம் ஜபித்து விபூதி எடுத்து இந்திரன் உருவின்மீது வீசினார்.அதனை நந்திதேவர் தடுத்தவுடன் வேதனை கொண்டு சிவநிந்தனை கேட்டபின் உயிர்வாழ விரும்பாது மூலாக்கினியால் உயிர்விட முயலுகையில் சிவபிரான் தரிசனம் தந்து வேண்டிய சித்திகளைக் கொடுத்தார்.
                    
18 .உபமன்யு மகரிஷி கோத்ரம்
ரிஷி வரலாறு :- வியாக்ரபாத மகரிஷியின் குமாரர் என்பது ஆதித்ய புராணம். த்ருமன்யு என்பவரின் புத்திரர் என்பது சிவ ரகஸ்யத்தின் கருத்து. இவர் பிறந்த பின் தாய்ப்பால் இன்மையால் அரிசி மாவினைச் சர்க்கரை கலந்து ஐந்து வயது வரை ஊட்டினாள் தாய். இவரின் தாய் இவரை எடுத்துக்கொண்டு தன் சகோதரராகிய வசிஷ்ட முனிவர் ஆசிரமம் சென்றாள். அங்கு வஷிஸ்டரின் பத்தினியான அருந்ததி தேவியார் ஓமம் செய்து மீதம் இருந்த காமதேனுவின் பாலைத்தர, அதனை ஒரு மாதம் வரை உண்டு வளர்ந்தார். 

பின் அன்னை; மகனுடன் தம் ஆசிரமம் சென்றாள். அங்கு பழையபடி அரிசி மாவும் சர்க்கரையும் கரைத்துக் கொடுக்க அது வேண்டாம் காமதேனுவின் பாலே வேண்டும் என அழப் பூர்வத்தில் சிவபூசனை செய்தவர்க்கே அது கிடைக்கும் எனத் தாய் சொன்னாள். 

பின் தம் தந்தையிடம் தீட்சை பெற்றுத் திரிகூட மலையில் தவம் மேற்கொண்டார். சிவபிரான் இவருக்குக் காட்சி தந்து பாற்கடலை இவருக்குத் தந்தார். 

ஒரு முறை இவர் அதிதிகளுக்கு உணவு படைத்தது அந்தப் பரிகலத்தை வெளியில் எறிந்தார். அந்த எச்சம் அங்கு சாபத்தினால் பல்லி உருக்கொண்டு இருந்த தம்பதியர் இருவர் தலையில் பட தலை பொன்னுருவம் அடைந்தது. பூர்வ ஞானம் பெற்ற இருவரும் உபமன்யு முனிவரைத் துதித்து அவரால் தீர்த்த யாத்திரை செய்து சாப விமோசனம் பெற்றனர். 

மரிசீ முனிவரால் பேயுரு அடையுமாறு சில முனி குமாரர்கள் சாபம் பெற்றிருந்தனர். அவர்கள் உபமன்யு முனிவரின் தவத்தைக் கெடுக்க வர பஞ்சாட்சர மந்திரம் ஜெபித்து அவர்களின் பேயுருவை ஒழித்தார். 

இவரைச் சோதிக்க எண்ணிய சிவபிரான் இந்திரன் உருக்கொண்டு வந்து சிவ நிந்தனை செய்ய அகோராஸ்திர மந்திரம் ஜெபித்து விபூதி எடுத்து இந்திரன் உருவின் மீது வீசினார். அதனை நந்தி தேவர் தடுத்தவுடன் வேதனை கொண்டு சிவநிந்தனை கேட்டபின் உயிர்விட முயலுகையில் சிவபிரான் தரிசனம் தந்து வேண்டிய சித்திகளைக் கொடுத்தார். 
வங்குசப் பெயர் விளக்கங்கள்
சுகமிகயதவரு :- மிக்க சுகபோகங்களுடன் வாழ்ந்தவர். 
சூரியதவரு :- சூரிய வழிபாடு செய்பவர் . சூரியனை வீட்டுத் தெய்வமாகக் கொண்டவர். 
ஹெக்கடியதவரு :- ஹெக்கடி என்னும் வித்தையில் வல்லவர். 
மோடியதவரு :- மோடி போன்ற வித்தையில் வல்லவர். 
சுப்பண்ணதவரு :- சுப்பண்ணன் என்பவரின் வம்சா வழியினர். 
இக்கோத்திரத்தில் மேலும் காணப்படும் வங்குசங்கள் ஜரீகெயதவரு, சஞ்ஜெயதவரு, சூருமெயயதவரு




சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதை(பகுதி-1)



1. உபமன்யு முனிவர் எடுத்துரைத்த மகிமை
நைமிசாரணிய வாசிகளை நோக்கிச் சூதபுராணிகர் கூறலானார்.
முனிவர்களே! ஒரு காலத்தில் தேவகீ நந்தனரான கிருஷ்ண பரமாத்மா தமக்குப் புத்திர பாக்கியம் இல்லாமையால் அதை எவ்வாறு அடைவது என்று தனிமையில் யோசித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது வியாக்ரபாத முனிவர் புத்திரரும் சிவபெருமானால் திருப்பாற்கடலை அருந்தியவருமான உபமன்யு முனிவர் அங்கு வந்தார். அவரைக் கண்டதும் ஸ்ரீ கிருஷ்ணர் சாஸ்திர முறைப்படி அவரைப் பூஜித்து தகுந்ததொரு பீடத்தில் அமர்த்தி முனிவரே, நீங்கள் நாள்தோறும் அன்புடன் யாரைப் பூஜித்து அர்ச்சனை செய்கிறீர்கள்? என்று கேட்டார்.
உபமன்யு முனிவர் அகமிக மகிழ்ந்து, கிருஷ்ணா! நான் பூர்வத்தில் அதிகமான தவத்தை அநேக காலம் செய்யும்போது, பகவானாகிய சிவபெருமான் பெருங்கருணையோடு பிரத்யட்சமானார் அப்போது முத்தலையோடு விளங்குவதும் தன்னை எப்போதும் பணிவோருக்குச் சுகங்கொடுப்பதும் ஒரு காலையுடையதும் பயங்கரப் பற்களையுடையதும் ஜ்வாலையோடு கூடிய ஜோதி மயமான முகங்களையுடையதும், இரண்டாயிரம் கிரணங்களோடு விளங்குவதும் ஆயுதங்கள் யாவற்றிலும் சிறப்புடையதும் யாவற்றிலும் முதன்மையானதும் அநேகவித சின்னங்களையுடையதும் பலகோடிச் சத்துருக்களை அழிக்கத் தக்கதும் மஹேஸ்வரனால் பிரயோகிக்கப்படும் போது அண்டரண்ட பிரம்மாண்டங்களையெல்லாம் சங்கரிப்பதும் பிரம விஷ்ணுக்களாலும் தேவர்களாலும் ஜெயிக்கப்படாததுமாகிய குலத்தை அவர் புறத்தில் கண்டனே அதைவிட உயர்ந்த ஆயுதம் மூன்று உலகங்களிலுமில்லை அதைச் சர்வேஸ்வரனுடைய திரிசூலம் என்று யாவரும் பிரசித்தமாகப் புகழ்வார்கள். அது சமுத்திரங்களையெல்லாம் உலரச் செய்யவல்லது, அதை மாந்தாதா என்ற பேரரசன் சிவானுக்கிரகத்தால் அடைந்து, மன்னவர் அனைவரையும் வென்று அஸ்வமேதயாகம் செய்திருக்கிறான். இலவணாசுரன் சிவானுக்கிரகத்தால் அதைப் பெற்றுத் தன் வீட்டில் வைத்துக் கொண்டு, கர்வம் மிகுந்து சத்துருக்கினன் என்னும் அரசனைப் போருக்கு அறைகூவி அழைத்து அவனால் மாண்டான். சத்துருக்கினன் அவனை வென்ற பிறகு அவனுடைய பொருள்களைச் சுவாதீனம் செய்து கொண்ட போது அதி தீக்ஷண்யமானதும் யாவரையும் அஞ்சச் செய்வதும் சர்ப்பமணிந்ததும் சொல்ல முடியாத பிரவாகத்தையுடையதும் முத்தலைகளைப் புருவங்களாகக் கொண்டு பயமுறுத்துவதும், புகையில்லாத நெருப்பை போன்றதும் உதயசூரியனைப் போன்றதும் யமனைப் போன்றதுமான அந்தச் சூலாயுதம் அவனுக்குச் சுவாதீனமாகாமல் சிவபெருமானிடம் போய்ச் சேர்ந்தது.
அடுத்து கூர்மையானதும் அநேக சர்ப்பங்களால் அலங்கரிக்கப்பட்டு, பிரளய காலாக்கினியாலேயே புருஷ ரூபமடைந்துள்ளதுமான மழுவாயுதத்தை அந்த மஹாதேவரின் மற்றொரு புறத்தில் கண்டேன் இந்தப் பரசு என்ற ஆயுதத்தைப் பரசுராமன் அரசர்களை அழிக்கும் பொருட்டுச் சிவானுக்கிரகத்தால் பெற்று அது தன்னிடத்திருப்பதால் வலிமையும் ஆற்றலும் மிகுந்து எழுபத்து மூன்று முறை க்ஷத்திரிய குலத்தை நாசஞ் செய்தான்.
ஆயிரம் முகங்களையுடையதும் வியாப்தமானதும் இரண்டாயிரம் புஜங்களையுடையதும் புருஷாகிருதியானதும் இரண்டாயிரம் கண்களையுடையதும் ஆயிரம் கால்களையுடையதுமான சுதர்சனம் என்னும் சக்கரம் அப்பெருமானின் பக்கத்தில் விளங்கக் கண்டேன் இவை தவிர வஜ்ராயுதம், சக்தியாயுதம், தூணீரம், கட்கம், பாசம், அங்குசம் கதை, முதலிய திக்குப் பாலகர்களுடைய ஆயுதங்களும் அந்தச் சர்வேஸ்வரனின் அருகில் இருக்கக் கண்டேன். இவ்வாறு எனது திடபக்தியைப் பரீக்ஷிக்க வேண்டி, அப்பெருமான் பெருங்கோர உருவமாகக் காட்சித்தந்து அருளினார்.
அவருடைய வலது புறத்தில் அன்னவாகனத்தை தூரத்தில் இருத்தி நிற்கிற பிரமதேவனையும் இடது புறத்தில் சங்கு, சக்கர, கதை, கட்க, கோதண்டங்களை அணிந்து, கருட வாகனத்தைச் சமீபத்தில் இருத்தி நிற்கும் விஷ்ணுவையும், பராசக்தியாகிய பார்வதிதேவியையும், பார்வதிதேவியின் பக்கத்தில் மயூரவாஹனமும் திவ்ய தேஜஸோடுக்கூடிய வேலாயுதத்தை ஏந்திய சுப்பிரமணியரையும் சூலப்படையைக் கையில் ஏந்திய நந்தி தேவரையும் அங்குச பாசங்களை அணிந்து ஒரு புறத்திலிருக்கும் விநாயகரையும் பூதகணங்களையும் சப்தமாதர்களையும் கண்டேன் அவர்கள் சிவபெருமானின் பரிவாரங்களாகச் சூழ்ந்து துதி செய்யவும், உலகிலுள்ள யாவுமே அவரருகே விளங்கக்கண்டு ஆனந்தத்துடன் அதிசயித்துக் கைகூப்பி வணங்கினேன். அப்போது பகவான் சாம்பவமூர்த்தி புன்னகை செய்து, வேதியனே யான் எவ்வளவு பயங்கரமாகத் தரிசனம் கொடுத்ததும் உன் மனம் சலனமடையவில்லை, நீ நன்றாய்ப் பரீக்ஷிக்கப்பட்டவன். எனது நிரதிசயமான பக்தியை நீ அடைந்திருக்கிறாய். உனக்கு மங்களம் உண்டாகுக. தேவர்களுக்கும் அரிய வரத்தை விரைவில் கேள்! என்றார்.
நான் பரமபதியைப் பணிந்து பகவானே! உமக்குச் சந்தோஷம் உண்டானதால், அடியேனுக்குத் தங்களிடம் நீங்காத பக்தியிருக்கத் தயை செய்யவேண்டும் அத்தகையப் பக்தியால் திரிகால ஞானம் கைகூடும். என் வமிசத்தாரும் நானும் பாலும் அன்னமும் குறைவின்றிப் புசிக்க வரங்கொடுக்க வேண்டும் சர்வேஸ்வரரே! என்னுடைய ஆசிரமத்தில் தாங்கள் எக்காலமும் தரிசனமளித்துக் கொண்டிருக்கவேண்டும் என்று வேண்டினேன்.
அதற்குச் சிவபெருமான், நீ, நரை, திரை, மூப்புக்களை விலகுக முனிவர்களிலே புகழுடையவனாக அவர்களாலும் புகழத்தக்கவனாகுக சீலம் உருவம், குணம் செல்வம் முதலியவை என் கருணையால் உனக்கு மேன்மேலும் பெருகுக, நீ பாலைப்பருக விரும்பியதால் உனக்குப் பாற்கடலையே கொடுத்தோம் நீ விரும்பும்போது அது உன்னை அடைக. நீ விரும்பிய பொருள்களும் அப்போதே உன்னை அடையும் பாற்கடல் அமுத சொரூபமாகையால் அதை நீ அருந்துவதினால் வைவஸ்வத மநுவந்தரம் முடியும் வரை உன் வமிசத்தாருடன் கூடி வாழ்வாய் உன் கோத்திரம் எப்போதும் அபிவிருத்தியடையும். உன் ஆசிரமத்தில் எப்போதும் என் தரிசனத்தையும் உனக்கு நீங்காத பக்தியையும் கொடுப்போம். இன்னும் உனக்கு வேண்டிய வரம் ஏதேனுமிருப்பின் அதையும் தருவோம் நீ விரும்பத்தக்கது பிரிதொன்றும் இல்லை என்று திருவாய் மலர்ந்தருளி திருவுரு மறைந்தார். கிருஷ்ணா இவ்வாறு சிவபெருமான் கோடி சூர்யப் பிரகாசமாய் திவ்யதரிசனம் தந்து வரங்களைக் கொடுத்து அருளினார்; அவரது கட்டளைப்படியே அவரது கருணையால் நானும் அனைத்தையும் அடைந்தேன் கந்தர்வாதி கணங்களுக்கும், முனிவர்களுக்கும், வித்தியாதரர்களுக்கும் மனோரம்மியமான மலர்ச் செவிடிகளையும் மணம் வீசுவதும் ஆண்டு முழுவதும் குறைவின்றி மலர்வதுமான உத்தியானவனத்தையும் பிறவற்றையும் பெற்றேன் சர்வேஸ்வரனாகிய அந்தச் சாம்பசிவமூர்த்தியின் திருவருளால் நினைத்தபோது நினைத்த பொருளை அடையும் வல்லவனானேன் என்று உபமன்யு முனிவர் ஸ்ரீகிருஷ்ணருக்குச் சொன்னார்.
2. உபமன்யு கிருஷ்ணர் சம்வாதம்
துவாரகாபுரி வாசியான கிருஷ்ணரை நோக்கி உபமன்யு முனிவர் மேலும் சொல்லுகிறார். ஸ்ரீ சர்வேஸ்வரரான சூலபாணியின் அனுக்கிரகத்தால் சர்வஞானமும், பூதபவிஷ்ய வார்த்தமானங்களும் உணர்ந்தேன் பிரம, விஷ்ணு முதலான தேவர்களாலும் பூஜித்ததற்கரிய அமர நாயகனாகிய அரவாபரணனை நான் பிரத்யக்ஷமாகத் தரிசித்தேன் என்னைவிடத் தன்னியர் திரிலோகங்களிலும் யார் உண்டு? இருபத்தாறாவது என்று பிரசித்தமானதும் நித்தியமானதும் வேத முனிவர்களால் தியானிக்கப்பட்டதும் நாசமற்றதுமாக விளங்குகிற பரதத்துவப் பொருள் எல்லாத் தத்துவங்களையும் படைத்து சாக்ஷிபூதமாக நின்று, ஷட்குண ஐஸ்வரிய ஸம்பந்தனான மகா தேவனேயாகும். அவனே பிரதான புருஷேஸ்வரன் அந்தக் கடவுளே, தன் வலது புறத்திலிருந்து உலகங்களுக்குச் சிருஷ்டி கர்த்தாவான பிரமனையும் இடது புறத்திலிருந்து உலகரக்ஷண கர்த்தாவான விஷ்ணுவையும் படைத்தவர் பிரளயகாலத்தில் தம் இதயத்திலிருந்து உலகச்சங்காரஞ் செய்யத்தக்க உருத்திரனைப் படைப்பவர் யுகமுடிவில் ஊழிக்காற்றாக இருப்பவர்; காலஸ்வரூபமாக இருந்து சகல பூதங்களையும் அழிப்பவர். சர்வவியாபியாயுள்ளவர் சர்வபூதாத்மகமானவர் சர்வ பூதங்களுக்கும் பிறப்பிடமானவர் அத்தகைய மஹேஸ்வரன் பெருந்தேவர்களாலும் தரிசிப்பதற்கு அரியவர் அந்த மஹாதேவரைப் புத்திர லாபம் உண்டாகும் பொருட்டு, நீ அவசியமாக ஆராதிக்கவேண்டும் கிருஷ்ணா! இதுவரையில் சிவபெருமானை ஆராதித்து அவர் அருளால் தமது மனோபீஷ்டங்களை அடைந்தவர்கள் சிலரது சரிதங்களை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.
பூர்வத்தில் ஹிரண்யகசிபன் பத்து லக்ஷம் வருஷம் சர்வ தேவர்களுடைய ஐஸ்வரியத்தையும் சர்வேஸ்வரனுடைய அனுக்கிரகத்தால் அடைந்தான் கடைசியில் இரண்டாயிரம் வருஷம் ஆயுளையுடைய பிரஹலாதனைப் புத்திரனாக அடைந்தான் அவன் சிவாநுக்கிரகத்தால் இந்திர நந்தனன் என்ற பெயரைப் பெற்று, விஷ்ணுவின் சுதரிசனச் சக்கிரமும் இருந்திரனுடைய வஜ்ஜிராயுதமும் தன் தேகத்தில் பட்டால் அவை பொடியாகவுதிர்ந்து போகத்தக்க திவ்விய தேகத்தைப் பெற்றான் சர்வேஸ்வரனுடைய வரத்தால் எந்த ஆயுதமும் அவன் தேகத்தை அணுகாத வரத்தைப் பெற்று, க்ருஹன் என்ற பெயரையுடைய மஹா பலசாலியாக இந்திரநந்தனன் விளங்கினான். அவன் ஈஸ்வர வரம் பெற்றுத் தன் பரிவாரத்துடன் தேவர்களை எதிர்த்துத் துன்புறுத்த தேவர்கள் அவனை ஜெயிக்கமுடியாமல் திகைத்தார்கள். அவன் சிறப்பாகச் செய்துவந்த சிவபூஜையினால் களிப்படைந்த சிவபெருமான் திரிலோக சம்பத்தும் லக்ஷவருஷ ராஜ்யபாரமும் அநேகம் புத்திரரும் உண்டாக அநுக்கிரகம் செய்து இறுதியில் சாயுஜ்யமும் குசத் வீபத்தில் சுபகரமான ராஜபோகமும் உண்டாகும்படி வரந்தந்தருளினார் கண்ணா! பிரமனால் படைக்கப்பட்ட சுதமகன் என்ற தைத்தியன் சிவபெருமானைக் குறித்து நூறாண்டுகள் கடுந்தவம் செய்து அவரருளால் ஆயிரம் நகரங்களை அடைந்தான் பூர்வத்தில் வேதங்களில் பிரசித்திப் பெற்ற யாஞ்ஞவல்க்கிய மஹரிஷி, சர்வேஸ்வரனை ஆராதித்து உத்தம ஞானத்தை அடைந்தார். வேதவியாச பகவான் சிவார்ச்சனைச் செய்து ஈடிணையற்ற புகழையும் ஞானத்தையும் அடைந்தார். இந்திரனால் அவமதிக்கப்பட்ட வாலகில்லியர்; சர்வேஸ்வரனை அர்ச்சித்து ஸோமஹர்த்தாவாக ஒருவராலும் ஜெயிக்க முடியாத கருடனை ஜெயித்தார் ஜடாதரனாகிய சிவபெருமானுடைய கோபாக்கினியால் ஜலம் முழுவதும் வறண்டு போக தேவர்கள் யாவரும் ஸப்தகபால புரோடாஸத்தால் சிவபெருமானை அர்ச்சித்து தங்கள் விருப்பம் போல மீண்டும் ஜலத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். அத்திரி முனிவரின் மனைவியான அனுசூயை சிவபெருமானை குறித்து முந்நூறு ஆண்டுகள் கொம்பின் மேனிருந்து கடுந்தவம் செய்து, தத்தாத்திரேய முனிவரையும் சந்திரனையும், துர்வாச முனிவரையும் புத்திரர்களாகப் பெற்றாள். விகர்ணன் என்ற முனிவன் மஹாதேவனை ஆராதித்து இஷ்டசித்திகளை அடைந்தான். சாகல்லிய முனிவன் மகிழ்ச்சியுடன் ஒன்பதாயிரம் ஆண்டுகள் சிவராதனையை மானஸீகமாகச் செய்து இறையருளால், நீ கிரந்தகர்த்தன் ஆகுக! உன்கீர்த்தி அழியாது திரிலோகங்களிலும் விளங்குக மஹாருஷிகள் பலர் உன் குலத்தில் பிறக்கட்டும்! உன் குலத்தில் பிறந்தவன்ஸுத்ர கர்த்தா ஆவான்! அவன் ஸாவர்ணி என்னும் பெயரைப்பெறுவான்! அவன் கிருத யுகத்தில் முனிவனாக இருந்து அறுநூறு ஆண்டுகள் தவஞ்செய்வான்! என்றும் வரங்கொடுக்கப் பெற்றான் இவ்விதமாகச் சர்வேஸ்வரன் முன்னார்களான பெரியோர்களால் துதிக்கப் பெற்றவர் கிருஷ்ணா! நீயும் அவ்விதமே சங்கரபகவானை ஆராதிப்பாயானால் மனதிலுள்ள விருப்பங்கள் அனைத்தையும் அடைவாய். அவரது பெருமைகளை,ஒற்றை நாக்குடைய நான், ஆயிரம் ஆண்டுகள் சொன்னாலும் முடியாது!
இவ்வாறு உபமன்யு முனிவர் கூறியதைக் கேட்டதும் கண்ணபிரான் பரமாச்சரியம் அடைந்து தூய உள்ளம் வாய்ந்த உபமன்யு முனிவரை நோக்கி தவஞானியே! அந்தணோத்தமரே! நீர் தன்னியர் உம் ஆசிரமத்தில் தேவாதி தேவனுடையஸாந்நித்யம் விளங்குகிறது உம்மைப் போன்ற பெரியோர்களின் தரிசனத்தால் சர்வேஸ்வரனாகிய பரமசிவன் எனக்கும் திருவருள் செய்வான்! என்று கூறினார்.
கிருஷ்ணா! நீ விரைவில் பரமேஸ்வரனைத் தரிசிக்கப்போகிறாய்! உமையொரு பாங்கரான அந்த எம்பெருமானால் நீ இருபத்து நான்கு வரங்களைப் பெறுவாய், நீயே சாக்ஷõத் விஷ்ணு வாகையால் அவர் உனக்கு நல்வரங்கள் கொடுப்பார். நீ தேவர்களில் எல்லாம் பூஜ்யனாவாய் அச்சுதா! சிரத்தையான மனமுடைய உனக்கு ஜெபஞ்செய்வதற்குத் தகுதியான ஒரு மந்திரத்தைநான் உபதேசிக்கப் போகிறேன் அந்த மந்திர உபாசனையால் நீ பிரம்ஹன்யனாகி நிச்சயமாகச்சர்வேஸ்வரனை விரைவில் தரிசித்து உனக்குச் சமமான வலிமையுள்ள புத்திரனைச் சிவனருளால் பெறுவாய் கிருஷ்ணா! நீ சிவபெருமானைத் தரிசித்து, மகேஸ்வரா! நான் உம்மைத் தரிசித்தேன். எனக்குப் பிள்ளைப் பேறு தந்தருள வேண்டும் என்று வரம் கேட்பாயாக! என்றார்.
இவ்வாறு உபமன்யு கிருஷ்ண சம்வாதத்தில் சிவப்பிரபாவங்களால் எட்டு நாட்கள் க்ஷணமாகக் கழிந்தன ஒன்பதாவது நாளன்று கிருஷ்ணமூர்த்தி உபமன்யு முனிவரால் தீøக்ஷ செய்யப்பட்டார் அதர்வசிகரமாக விளங்கும் சிறந்த ஸ்ரீ பஞ்சாக்ஷர மந்திர உபதேசம் பெற்று கிருஷ்ணமூர்த்தி முன் ஜடாதராகிப் பிறகு முண்டிதம் செய்து கொண்டு, சிவ சம்பந்தமாகவே நிற்பேன்! என்று சங்கல்பம் செய்து கொண்டு, ஆசார நியமத்துடன் யோக தண்டம் ஏற்று, தர்ப்பையால் அரைஞாண் அணிந்து, சிவதீøக்ஷ செய்யப்பெற்றவராய் தவம் மேற்கொண்டார். முதல் மாதத்தில் ஆகாரமின்றி இருந்தும் இரண்டாவது மாதத்தில் நீர் மட்டும் அருந்தியும் மூன்று நான்கு ஐந்து ஆகிய மூன்று மாதங்களில் காற்றை மட்டும் உட்கொண்டும், கால் பெருவிரல்களின் மேல் நின்று கொண்டும் ஆறாவது மாதத்திலிருந்து பதினைந்தாவது மாதம் வரையில் தோள்களை உயர்த்திக் கைகளைக் குவித்துக் கொண்டும் தவமியற்றினார். பதினாறாவது மாதத்தில் இந்திரதனுசுடன் கூடிய மேகங்கள் உலகம் முழுவதும் வியாபித்திருக்கையில் சிவபெருமான் அவருக்குத் தரிசனம் தந்தார். பார்வதி சமேதராகவும் சந்திரசேகரராகவும், சர்வ ஆச்சரிய ஸ்வரூபியாகவும் விளங்கும் சர்வேஸ்வரனான சிவபெருமானைக் கிருஷ்ணமூர்த்தி தரிசித்து கைகூப்பி வணங்கியவாறு எதிரே நின்று பலவிதமான ஸ்தோத்திரங்களால் துதித்து சகஸ்ர நாமங்களால் சங்கரனைப் பூஜிக்கையில், வேத கந்தர்வ வித்தியாதரர்கள் மலர்மாரி பொழிந்தார்கள் பலமுறை பூமாரி பொழிந்து இறுதியில் கிருஷ்ணரின் சிரம் மீதும் புஷ்பமாரி பொழிந்தார்கள். சித்தர் முனிவர் அப்சரஸ்கள் முதலானவரால் சூழப்பெற்று விளங்கும் சிவபெருமான் தம் இடதுபுறத்தில் திகழும் பார்வதி தேவியின் திருமுகத்தைப் பக்தவாத்ஸல்யத்தோடு, பார்த்து இந்தக் கண்ணன் செய்த தவத்திற்கு நான் மகிழ்ந்தேன் என்று கூறி கிருஷ்ணரைப் பார்த்து, கிருஷ்ணா! நான் உன் பக்தியை அறிவேன் நீ திடவிரதத்தை உடையவன் என்றும் நான் அறிவேன். ஆகையால் மூவுலகத்திலும் கிடைப்பதற்கு அரிய வரங்களில் எட்டு வரங்களைக் கேள்! என்று கூறினார். கிருஷ்ணன் அஞ்சலி செய்து மகேஸ்வரா! என் மனம் எப்போதும் தர்ம நெறியிலேயே இருக்கவேண்டும். என் கீர்த்தி உலகில் உள்ளவருடையக் கீர்த்திக்கெல்லாம் சிறப்பானதாக இருக்கவேண்டும். நான் பெரும் பலசாலியாக இருக்க வேண்டும். உமது அருகிருப்பு (சாமீப்யம்) எனக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும். உம்மிடம் எப்போதும் எனக்குத் திடபக்தி உண்டாயிருக்க வேண்டும். பத்துப் புத்திரர் எனக்கு நிஷ்க்குஷ்டமாக இருக்க வேண்டும். என் பகைவர்கள் பலவான்களாக இருந்தாலும் என்னை எதிர்த்தால் அழிய வேண்டும் யோகிகளுக்கெல்லாம் நான் தலைவனாக இருக்க வேண்டும் என்று எட்டு வரங்களை கேட்டார். சிவபெருமான் அவ்வரங்களை அவ்வாறே பெறுக என்று கூறி, உன் புத்திரர்களில் சாம்பன் என்ற மகாபராக்கிரம சாலியான ஒரு புத்திரன் ஒரு முனிவர் சாபத்தால் மானுடனாகப் பிறப்பான் இன்னும் நீ வேண்டியவை ஏதேனும் இருந்தால் அவற்றையும் அடைவாயாக என்று வரங்கொடுத்தார் அவரை ஸ்ரீகிருஷ்ணர் பலவிதமாக தோத்திரங்கொண்டு மகிழச் செய்தார்.
சவுனகாதி முனிவர்களே! அதன் பின்னர் கிருஷ்ணர் பார்வதி தேவியாரையும் வேதோக்தமான தோத்திரங்களால் துதித்துப் போற்றினார். பார்வதிதேவி அவரை நோக்கி கிருஷ்ணா! நீ பரமபக்தன் உலகத்தில் உள்ளவருக்குத் துர்லபமான வரங்களை நான் உனக்குக் கொடுக்கிறேன் வேண்டிய வரங்களைகேள் என்று கூறினாள். கிருஷ்ணர் கும்பிட்டு; மஹா தேவீதாயே! நீ மகிழ்வுறுவதானால் அவ்வண்ணமே அரியவரங்களை தந்தருள்க; ஜகத்ஸ்வரூபிணீ! எனக்கு வேண்டிய வரங்களாவன ஜீவஹிம்சையில்லாத விரதத்தால் பிராமண சமானனாகவும் எனக்கு எப்பொழுதும் சத்துருக்கன் இல்லாதவனாகவும் பிராமண பூஜை செய்யத்தக்க பக்தியை உடையவனாகவும் விளங்கவேண்டும், என் பெற்றோர் எப்போதும் மகிழ்ந்திருக்கவும்; சகல பூதங்ளும் என்னிடம் அனுகூல மனமுடையவையாக இருக்கவும் எவ்விடத்தும் என்னை எதிர்ப்பவர்கள் இல்லாமலிருக்கவும்; தங்கள் சேவை கிடைத்த எனது வமிச பரம்பரை சதாசார சம்பத்தையுடையதாக இருக்கவும் வேண்டும். நூறு யாகங்கள் செய்து இந்திராதிதேவர்களைத் திருப்தி செய்யவனாக நான் விளங்க வேண்டும். எங்கள் வீட்டில் எப்போதும் ஆயிரத்தேழுயதிகளும் ஆயிரத்தேழு அதிதிகளும் போஜனம் செய்து திருப்தியடையவும் உற்றார் உறவினரிடம் எனக்குப் பிரீதி உண்டாகியிருக்கவும். எப்போதும் எல்லாச் சுகங்களுமுண்டாகவும் வேண்டும். சுந்தரமான தேகத்தையுடைய ஆயிரம் மனைவியருக்கு நான் நாயகனாகவும் அக்ஷீணரேதசுடையவனாகவும் விளங்கவேண்டும் அன்னத்தைக் காட்டிலும் எனக்குச் சத்தியவான்கள் ப்ரீதியாக இருக்கவும் வரமளிக்க வேண்டும்! என்று வேண்டினார் மங்களம் அனைத்திற்கு அதிமுதல்வியான பார்வதிதேவி ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளைக்கேட்டு மகிழ்ந்து அவ்வாறே ஆகுக என்று வரமளித்து உனக்கு மங்களம் உண்டாகுக என்று வாழ்த்தினாள் பிறகு பார்வதி பரமேஸ்வரர் அந்தர்த்தானமானார்கள்.
பிறகு ஸ்ரீகிருஷ்ணர் கேசி என்னும் அரக்கனைச் சங்கரித்து, பதரிகாசிரமத்தையடைந்து தம் தீக்ஷõ குருவான உபமன்யு முனிவரை வணங்கி நடந்தவைகளையெல்லாம் அவரிடம் விண்ணப்பித்தார். அவரை உபமன்யு முனிவர் நோக்கி  கிருஷ்ணா! சிறந்த வரங்களால் உலகத்திலுள்ளவரைக் காத்தருள்பவர் சர்வேஸ்வரனான சிவபெருமானையன்றித் திரிலோகங்களிலும் யாவருளர்? ஒருவருமில்லை! அப்பரமசிவன் குரோத புத்தியுடை யாருக்கும் சிறிது கஷ்டத்துடன் தரிசனமளிப்பார். ஞானத்திலும் தபத்திலும் சவுகரியத்திலும், தைரியத்திலும் சம்புவினுடைய மேம்பாடுகளைச் சொல்கிறேன் எனக் கூறுகையில் கிருஷ்ணர் சிரத்தையோடு சந்திர மவுலியாகிய சிவபெருமானிடம் மனஞ் செலுத்தியிருந்தார். அவ்வாறிருக்கும் கண்ணனை நோக்கி உபமன்யு முனிவர் கூறலானார்.
கிருஷ்ணா! பகவானான சங்கரன் பூர்வத்தில் பிரமலோகத்தில் மகாத்மாவும் பிரம யோகவானுமாகிய தண்டி என்னும் மகரிஷியால் சகஸ்ர நாமங்களால் தோத்திரஞ் செய்யப்பட்டார். மகா விசாலமானதும் நிகண்டும் ஞானச் சாத்திரமுமாகவுள்ள அந்தத் தோத்திரம் சாங்கிய மதத்தர்களாகிய சிலரால் படனஞ் செய்யப்படுகின்றது. மானீடரோ அதைத் தோத்திரஞ் செய்ய அசக்தராயிருப்பார்கள். ஆயினும் உலகத்தில் ஒரே இடத்தில் சிலர் அதைப் படனஞ் செய்து அதனால் பெருமானை ஆராதித்துச் சர்வேஸ்வரா நுக்கிரகத்தால் இஷ்டமான வரங்களைப் பூர்வத்திற் பெற்றிருக்கின்றனர் அவ்வாறு வரம் பெற்ற மகரிஷிகளில் சிலருடைய சரிதங்களையும் உனக்குச் சொல்லுகிறேன். கேள் அத்திரி முனிவன் கோகர்ண ÷க்ஷத்திரத்தில் சர்வேஸ்வரனை நோக்கி நூறு வருடந் தவஞ்செய்து நூறு புத்திரர்களையும் அழியாத கீர்த்தியையும் பெற்று வாழ்ந்திருக்கிறான். பிறப்பு இறப்புப் பந்தங்களை ஒழித்தவர்களும், தர்மங்களை உணர்ந்தவர்களும் நூறாயிரவருட ஆயுளையுடையவர்களும், அயோனிஜர்களும் நூறாயிரவருட ஆயுளையுடைவர்களுமான அப்புத்திரர்களில் ஒருவன் நிலத்தின் எல்லையைக் குறிப்பதில் அக்கிரமமான விவாதஞ்செய்து பிரமஹத்தியடைந்தான் எல்லா ரிஷிகளும் அவனை பிரமஹத்தி செய்தவன், என்று விலக்கினார்கள். அவ்வாறு பாபியானவனைச் சிவபெருமான் பரமரகிதனும் சிரேஷ்டனுமாகச் செய்தார் பரசுராமன் சர்வவியாபகரான சிவபெருமானை ஆராதித்து க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்ட தன் தந்தையான ஜமதக்னி முனிவரைக் கருதிச் சிவசன்னதியில் துக்கித்து அவரது கண்ணோக்கால் மகா கடூரமான பரசு ஆயுதத்தைப் பெற்று எழுபத்து மூன்று தரம் க்ஷத்திரிய வமிசத்தை நாசஞ் செய்தான். பிரசன்னமாயிருக்கும் சிவபெருமானுடைய அநுக்கிரகத்தையடைந்து க்ஷத்திரிய வதையால் தனக்கு நேர்ந்த உபபாதகத்தை மகேந்திரகிரியில் தவஞ்செய்து விலக்கி, பிறரால் வெல்லமுடியாத சிரஞ்சீவியாகி இன்னும் தவஞ்செய்து கொண்டும் சிவலிங்கார்ச்சனை செய்து கொண்டும் சித்தர் சாரணர் முதலானாருடன் மகேந்திரகிரியில் காணப்படுகிறான். அவ்வகைய சிரஞ்சீவியான பரசுராமன் கல்பாந்தத்தில் மீண்டும் தன் வைகுண்டத்தை அடைவான். அஸித முனிவருக்குத் தம்பியான தேவலன் என்னும் முனிவன் முற்காலத்தில் இந்திரனால் சபிக்கப்பட்டு அஞ்ஞானத்தால் கோபமுற்று உலகத்திற்கெல்லாந் தொந்தரை செய்ய எத்தனித்து, அதர்மமான தபசை செய்து இறுதியில் இஷ்டகாமியங்களையெல்லாம் எளிதிற் கொடுக்கவல்ல சிவலிங்க பூஜை செய்து, நிலையான புகழையும் தர்மத்தையும் ஆயுளையும் அடைந்தான்.
மனுவிற்குக்கண்ணால் பிறந்த வசிஷ்டமுனிவர் சாமகானஞ் செய்வோர் சபையில் க்ருத்ஸமதன் என்னும் ரிஷியை நீ மனங்கெட்டு ரதந்தரம் என்னும் சாமத்தை அபஸ்வரமாக ஏன் கானஞ்செய்கிறாய்? என்று கோபித்து இருபத்தொன்பதாயிர வருஷம் நீர்த்துளியும் சருகுமில்லாததும் துஷ்ட மிருகங்கள் சஞ்சரிப்பதுமான தண்டகாரண்யத்தில் அறியாமையோடு துக்ககரமுள்ள ஒரு மிருகமாக இருக்கக்கடவாய் என்று சபித்தார். அந்தச் சாபத்தால் துன்பப்படும் க்ருத்ஸமதன் மகா பயங்கரமும் ஜலமற்றதும் பழந்தரும் மரங்கள் ஒன்றுமில்லாததுமான இடத்தில் அப்பொழுதே மிருகமாகச் சென்று, சிவபெருமானைத் தியானித்துப் பலவிதமாகப் பணிந்து, பெரும்பக்தியோடு பிரணவத்துடன் கூடிய சிவபஞ்சாக்ஷர மந்திரத்தை மனதில் தியானித்துக் கொண்டிருந்தான். அதனால் களி கூர்ந்த சிவபெருமானால் மிருக முகமுடைய ஒரு கண நாதனாகிச் சிவபெருமானை அடைந்து சாபத்தை விலக்கிக்கொண்டு லம்போதராகணத்தை அடைந்தனன் சிவலிங்கார்ச்சனையே எப்பொழுதும் விரும்பிச் செய்த மகா தபசியான ஜவுகீஷவ்யன் என்னும் முனிவன் பூர்வத்தில் காசி÷க்ஷத்திரத்தில் சகல போகங்களையும் விடுத்து நிஷ்காமிய மணமுடையவனாய் சிவபெருமானை அர்ச்சித்து அவ்வெம்பெருமான் கடாக்ஷத்தால் அணிமாதி அஷ்ட-சித்திகளும் பெற்றுத் தவச் சிரமத்திலிருந்து நீங்கினான். சர்வேசுவரன் தன்னை நோக்கித் தவஞ்செய்த கர்க்கிய முனிவருக்கு மோட்சங் கொடுக்கத் தக்கதும் உலகத்தில் துர்லபமானது மான வரம் கொடுத்து. சரீர சம்பந்தமான பிரமாண்ய விஷயத்தால் பிரத்தியக்ஷமாகும் நான்கு ஸ்கந்தங்களையுடைய ஜோதிஷ சாஸ்திரம் என்னும் கணித சாஸ்திரத்தையும் நிலையான எல்லா வித்தைகளில் தேர்ச்சியையும் அவரைப் போன்ற ஆயிரம் புத்திரர்களையும் கொடுத்தருளினார்.
பராசர முனிவர் தன்னைத் தியானித்தபோது நரை திரை மூப்பில்லாத வேத வியாசர் என்னும் யோகியைப் புத்திரராகச் சந்தோஷத்துடன் கொடுத்தருளினார். மாண்டவிய முனிவர் பத்து லக்ஷவருஷம் சூலாக் கிரத்தினின்று பிராணனை விட்டுவிடுவேன் என்று தன்னுள் நியமணஞ் செய்துகொண்டு தவஞ்செய்து மனோவியாதி நீங்கிமிக்க சூலை வியாதிகளிலிருந்து விடுபட்டுச் சுகமுற்றார். தரித்திரனாகவுள்ள ஒரு பிராமணன் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைச் சபித்து சிவாநுக்கிரகத்தால் காலவன் என்னும் புத்திரனைக் குருவின் வீட்டில் விடுத்து, மகா இரகசியமாகவுள்ள யாகசாலையிலிருந்து தன் மனைவியை நோக்கி, பெண்ணே! யாராகிலும் அதிதிகள் வந்தால் நாம் தனமில்லாதிருத்தலின் வந்த அதிதியைப் பூஜிக்கச் சக்தியில்லையே அது பற்றி அவருக்கு நான் வெளியே போயிருக்கின்றேன் எனக் கூறுக! என்று கூறியிருந்தான். அப்படியிருக்கும் போது ஒரு சமயத்தில் மிகப் பசியால் வருந்தும் அதிதியொருவர் அங்குவர, அப்பார்ப்பினி அவரை நோக்கி, சுவாமி என் கணவர் எங்கேயோ போயிருக்கிறார் என்றாள். அதிதி தன் ஞானத்தால் உண்மையை உணர்ந்து கொண்டு பெண்ணே! அவன் அப்படியேயில்லாமல் போகுக! என்று கூறவே அப்போது அக்னிச்சாலையிலிருந்த வேதியன் அப்பொழுதே மரணமடைந்தான். பிறகு விஸ்வாமித்திர முனிவன் கருணையைப் பெற்று வந்த காலவன் என்னும் புதல்வன் தன் தாயால் நடந்த விருத்தாந்தங்களை அறிந்து கொண்டு சிவபெருமானையாராதித்து சாம்பவி என்னும் யாகத்தைச் செய்து அதனால் தன் தந்தை உயிர் பெற்று அந்த யாகசாலையினின்றும் புறம்பே வர அவனைக் கண்டு கைகுவித்து நின்றான். பிராமணன் அவ்வாறு பணிந்து நிற்குங்குமாரனைக் கண்டு நான் சிவாநுக்கிரகத்தால் கிருதார்த்தனானேன் தனவானாகவும் புத்திரவந்தனாகவுமானேன் உன்னைப் புதல்வனாகப் பெற்ற தால் இறந்தும் பிழைத்தேன் என்றான்.
கேட்டாயோ கிருஷ்ணா! நீயும் விருப்பங்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக