சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் |
கனாத்திறம்
உரைத்த காதை
|
|||
அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை |
|
||
|
|||
அகல் நகர் எல்லாம் - அகன்ற மனையிடமெங்கும், அரும்பு அவிழ் - அரும்பு முறுக்கு நெகிழ்ந்த, முல்லை நிகர் மலர் - முல்லையின் ஒளி பொருந்திய மலரை, நெல்லொடு தூஉய் - நெல்லுடன் தூவி, பகல் மாய்ந்த மாலை - பகலவன் மறைந்த மாலைப் பொழுதிலே, மணி விளக்கம் காட்டி - அழகிய விளக்கையேற்றி, இரவிற்கு ஓர் கோலம் - இராப்பொழுதிற்கேற்றதோர் கோலத்தை, கொடி இடையார் தாம் கொள்ள - கொடி போலும் இடையையுடைய மகளிர் ] |
|
||
"மாலதியின்
வரலாறு"
மாலதி
இறந்த மகவைக் கொண்டு தெய்வக் கோட்டங்களுக்குச் சென்று,வரம் வேண்டுதல்"
5 |
மாலதி மாற்றாள் மகவுக்குப் பாலளிக்கப் |
|
மேல் ஓர் நாள் - முன்னொரு நாளிலே, மாலதி - மாலதியென்னும் பெயருடைய ஓர் பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க - தனது மாற்றாளின் குழவிக்குத் தன் முலை சுரந்த பாலைச் சங்கால் ஊட்ட, பால் விக்கிப் பாலகன் தான் சோர - அப் பால் விக்குதலாலே அக் குழவி மரிக்க ; |
||
பார்ப்பா னொடுமனையா ளென்மேற் படாதனவிட் |
|
|
மாலதியும்-, பார்ப்பானொடு மனையாள் - பார்ப்பானும் அவன் மனைவியும், என்மேல் படாதன விட்டு - என்மேல் அடாப்பழி கூறுத லொழிந்து, ஏற்பன கூறார் என்று ஏங்கி - ஏற்பன கூறாராதலால் இதற் கென்செய்கேனென்று ஏங்கி, மகக் கொண்டு - அம் மகவை யெடுத்துக்கொண்டு ; |
||
|
டமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் |
|
அமரர் தருக் கோட்டம் - தேவர் தருவாகிய கற்பகம் நிற்குங் கோயில், வெள்யானைக் கோட்டம் - ஐராவதம் நிற்குங் கோயில், புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் - அழகினையுடைய பலதேவர் கோயில், பகல் வாயில் உச்சிக்கிழான் கோட்டம் - கீழ்த்திசையிற் றோற்றுகின்ற சூரியன் கோயில், ஊர்க் கோட்டம் - இறைவன் ஊராகிய கைலாயம் நிற்குங் கோயில், வேற்கோட்டம் - முருகவேள் கோயில், வச்சிரக்கோட்டம் - வச்சிரப் படை நிற்குங் கோயில், புறம்பணையான் வாழ் கோட்டம் - சாதவாகனன் மேவிய கோயில், நிக்கந்தன் கோட்டம் - அருகன் கோயில், நிலாக்கோட்டம் - சந்திரன் கோயில், புக்கு எங்கும் - இக் கூறிய கோயில்கள் எங்கும் புக்கு ; |
||
"சாத்தன்
கோயிலில் மாலதி பாடுகிடக்க, இடாகினிப்பேய் அவள் கையிலிருந்த பிணத்தைப்
பிடுங்கித் தின்னுதல்"
|
தேவிர்காள் எம்முறுநோய் தீர்மென்று மேவியோர் |
||
தேவிர்காள் - தெய்வங்களே, எம் உறுநோய் - எம்மையுற்ற இத்துன்பத்தை, தீர்ம் என்று - தீர்ப்பீராகவென்று கூறிக் கொண்டு சென்று, மேவி ஓர் பாசண்டச் சாத்தற்கு - ஓர் பாசண்டச் சாத்தன் கோயிலை அடைந்து அவன்பால். பாடுகிடந்தாளுக்கு - வரங்கிடந்தாளுக்கு ; |
|||
|
கேசும் படியோ ரிளங்கொடியாய் ஆசிலாய் |
|
|
ஏசும்படி ஓர் இளங் கொடியாய் - பிறரைப் பழிக்கும் வடிவையுடையதொரு பெண் வடிவாய்த் தோன்றிப் பாடு கிடந்தாளை நோக்கி, ஆசு இலாய் - குற்றமற்றவளே, செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார் - செய்யப்பட்ட தவமுடைய ரல்லார்க்குத் தேவர் வரங்கொடார், பொய் உரை அன்று பொருள் உரையே - இது பொய்யுரை அன்று மெய்யுரையே எனச் சொல்லி, கையிற் படுபிணம் தா என்று - கையிலுள்ள குழவி இறந்த பிணத்தைப் பார்ப்பதற்குத் தாராயென்று, பறித்து அவள் கைக்கொண்டு - அவள் கையினின்றும் பறித்து, சுடுகாட்டுக் கோட்டத்து - சக்கரவாளக் கோட்டத்தில், தூங்கு இருளிற் சென்று - செறிந்த இருளிற் போய், ஆங்கு இடுபிணம் தின்னும் - அங்கே குழியிலிடும் பிணங்களைத் தின்னும், இடா கினிப் பேய் - இடாகினிப் பேயானவள், வாங்கி மடியகத்து இட்டாள் மகவை - அக் குழவியை வாங்கி வயிற்றிலே இட்டாள் ; |
|||
"சாத்தன்
மகவாய் வருதல்"
|
மஞ்ஞைபோ லேங்கி யழுதாளுக் கச்சாத்தன் |
இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு - அப்பொழுது இடிக்குரல் கேட்ட மயில் அகவுமாறுபோல ஏங்கி யழுகின்றவளை நோக்கி, அச் சாத்தன் - அந்தச் சாத்தன் என்னுந் தெய்வம், அஞ்ஞை - அன்னாய், நீ ஏங்கி அழல் என்று - நீ ஏங்கி அழாதொழி யென்று கூறி, முன்னை உயிர்க் குழவி காணாய் என்று அக் குழவியாய் ஓர் குயிற் பொதும்பர் நீழல் குறுக - நீ செல்லும்வழி முன்னர்க் குயில்களையுடைய ஓர் மரச்செறிவின் நீழலில் உயிருடன் கிடக்கும் குழவியைக் காண்பாயென்று தான் அக் குழவியாய் அவ்விடத்துச் சென்று கிடப்ப, அயிர்ப்பு இன்றி மாயக் குழவி எடுத்து மடித் திரைத்து - ஐயமின்றி அவ் வஞ்சக் குழவியைத் தன் குழவியென்றெடுத்து வயிற்றிலணைத்துக் கொடு போய், தாய் கைக்கொடுத்தாள் அத் தையலாள் - அவள் தாயின் கையிற் கொடுத்தாள் ; |
"தேவந்தியின்
வரலாறு சாத்தன் கலை பல பயின்று
தேவந்தியுடன் எட்டு யாண்டு இல்லறம் புரிந்து நீங்குதல்"
|
மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித் |
||
தூய மறையோன் பின் மாணியாய் - இருமரபுந் தூய மறையோனுக்குப்பின் செல்லும் பிரமசாரியாய், வான் பொருட் கேள்வித் துறை போய் - சிறந்த கல்வியிலும் கேள்வியிலும் துறை போகி, அவர் முடிந்த பின்னர் - தந்தை தாயர் இறந்த பின்பு, இறையோனும் - குழவியாய் வந்த சாத்தனும், தாயத்தாரோடும் வழக்குரைத்து - தன் ஞாதிகளோடும் வெல்வழக் குரைத்து, தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து - தந்தை தாயர்க்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன் முதலியவற்றைச் செய்து முடித்து, மேய நாள் - தன் மனைவியோடே கூடி வாழ்ந்தபின் ஒருநாளில் ; |
|||
|
தேவந்தி யென்பாள் மனைவி அவளுக்குப் |
|
|
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு - தன் மனைவியாகிய தேவந்தி யென்று பெயர் கூறப்படும் அவளுக்கு, பூ வந்த உண்கண் பொறுக்கென்று - பூவின்றன்மையுடைய மையுண்ட கண் இதனைப் பொறுப்பதாக என்று நிருமித்து, மேவி - பின்பு அவளைப் பொருந்தி, தன் மூவா இள நலம் காட்டி - தனது என்றும் மூத்தலில்லாத இளைய அழகினை வெளிப்படுத்தி, எம் கோட்டத்து நீ வா என உரைத்து நீங்குதலும் - நீ எமது கோட்டத்திற்கு வாவெனச் சொல்லி நீங்கினானாக ; |
|||
"தேவந்தி
சாத்தன் கோட்டத்தை வழிபட்டிருத்தல்"
|
ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும் |
தூமொழி - தூய மொழியினை யுடையளாய தேவந்தி, ஆர்த்த கணவன் - எனது நெஞ்சினைப் பிணித்த கணவன், அகன்றனன் போய் எங்கும் தீர்த்தத் துறை படிவேன் என்று - தீர்த்தத் துறைகளெங்கும் போய்த் தீர்த்த மாடுவேன் என்று என்னை விட்டு நீங்கினன் ; அவனைப் பேர்த்து இங்ஙன் மீட்டுத் தருவாய் என - அவனை மறித்தும் இவ்விடத்தே அழைத்துத் தருவாயென, ஒன்றன்மேல் இட்டு - ஒரு பெயரிட்டுக் கொண்டு, கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் - அவன் கோயிலை நாடோறும் வழிபடுதலைக் கடனாகக் கொண்டிருப்பவள் ; |
"தேவந்தி
கண்ணகியிடம் சென்று ஆசி கூறுதல்"
|
வாட்டருஞ் சீர் - குறைதலில்லாத புகழையுடைய, கண்ணகி நல்லாளுக்கு - கண்ணகியாகிய நங்கைக்கு, உற்ற குறையுண்டு என்று - கணவன் பிரிதலால் உற்றதோர் துன்பமுண்டென்று, எண்ணிய நெஞ்சத்து இனையளாய் - நினைந்த நெஞ்சின் வருத்தத்தை யுடையளாய், நண்ணி - கோயிலை யடைந்து, அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் - அறுகு முதலியவற்றை இவள் கணவனைப் பெறல் வேண்டுமெனத் தூவி வழிபட்டு, சென்று - கண்ணகிபாற் போய், பெறுக கணவனோடு என்றாள்- கணவனைப் பெறுவாயாகவென வாழ்த்தினாள் ; |
"கண்ணகி
தான் கண்ட கனாவினைத் தேவந்திக்கு
உரைத்தல்"
45 |
கடுக்குமென் நெஞ்சங் கனவினால் என்கை |
பெறுகேன் - நீ இங்ஙனம் கூறுதலாற் பெறுவேனாயினும், கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் - யான் உற்றதோர் கனவினால் என் னெஞ்சம் ஐயுறுகின்றது ; அக் கனவு என்னையெனின், என் கை பிடித்தனன் போய் - என் கொழுநன் என்னைக் கையைப் பற்றி அழைத்துப் போக, ஓர் பெரும் பதியுட் பட்டேம் - யாங்கள் ஓர் பெரிய பதியின்கட் புக்கேம்; பட்ட பதியில் - அங்ஙனம் புக்க பதியிலே, படாதது ஒரு வார்த்தை இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்றன்மேல் - எங்கட்கு ஏலாததோர் பழிச் சொல்லை அவ் வூரார் இடுதேளிடுமாறுபோல என்மேற் போட்டனர் ; கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு - அப் பழிமொழியால் கோவலற்கு ஓர் துன்ப முண்டாயிற்றென்று பிறர் சொல்ல அதனைக் கேட்டு, காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் - அவ் வூரரசன் முன்னர் யான் சென்று வழக்குரைத்தேன் ; காவலனோடு ஊர்க்கு உற்ற தீங்கு ஒன்றும் உண்டால் - அதனால் அவ் வரசனோடு அவ் வூர்க்கும் உற்றதோர் தீங்குண்டு ; உரையாடேன் - அது தீக்கனாவாதலால் நினக்கு அதனை உரையேன் ; தீக்குற்றம் போலும் செறி தொடீஇ - செறிந்த தொடியினை யுடையாய், அப்பொழுது கடியதொரு குற்றம் உளதாயிற்று ; தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற - அத் தீய குற்றத்தை யுற்ற என்னோடு பொருந்திய மேலோனுடன் யான் பெற்ற, நற்றிறம் கேட்கின் நகையாகும் - நற்பேற்றினை நீ கேட்பாயாயின் அது நினக்கு நகையைத் தரும் ; (என - என்று சொல்ல), |
"தேவந்தி
கூறிய தேறுதல் உரை" & "கண்ணகியின் மறுமொழி"
55 |
கைத்தாயு மல்லை கணவற் கொருநோன்பு |
பொற்றொடீஇ - பொன்னாலாய தொடியினையுடையாய், கைத்தாயும் அல்லை - நீ அவனால் வெறுக்கப்பட்டாயுமல்லை ; கணவற்கு ஒரு நோன்பு பொய்த்தாய் பழம் பிறப்பில்- முற்பிறப்பிலே நின்கணவன் பொருட்டுக் காக்கவேண்டியதொரு நோன்பு தப்பினாய், போய்க் கெடுக - அதனால் உண்டாய தீங்கு கெடுவதாக ; உய்த்துக் கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் - காவிரி தன் நீரைக் கொண்டு சென்று கடலோடு எதிர்த்து அலைக்கும் சங்கமுகத்தயலதாகிய, மடல் அவிழ் நெய்தல் அம் கானல் - பூவின் இதழ் விரியும் நெய்தனிலத்துக் கானலிடத்தே, தடம் உள சோமகுண்டம் சூரிய குண்டம் - சோம குண்டம் சூரிய குண்டம் என்னும் பெயரையுடைய இரண்டு பொய்கைகள் உள்ளன ; துறை மூழ்கி - அவற்றின் துறைகளில் மூழ்கி, காம வேள் கோட்டம் தொழுதார் - மன்மதன் கோயிலையடைந்து அவனை வணங்கினாராயின், கணவரொடு தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார் - மகளிர் இவ் வுலகத்திலே தம் கணவரோடும் பிரியாதிருந்து இன்பமுறுவர் ; போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர் - மறுமையிலும் போக பூமியிற் போய்ப் பிறந்து கணவரோடும் பிரிவின்றி இன்பம் நுகர்வர் ; யாம் ஒரு நாள் ஆடுதும் என்ற அணியிழைக்கு - அவற்றில் யாமும் ஒரு நாள் ஆடக் கடவேம் என்று கூறிய தேவந்திக்கு, அவ் ஆயிழையாள் பீடு அன்று என இருந்த பின்னரே - கண்ணகி அங்ஙனம் துறை மூழ்கித் தெய்வந் தொழுதல் எங்கட்கு இயல்பன்று என்று சொல்லி இருந்தவளவிலே ; |
|
"கோவலன்
வருகையும், அவன் நிகழ்ந்ததற்கு இரங்கிக்
கூறுதலும்"
65 |
காவலன் போலுங் கடைத்தலையான் வந்துநம் |
|
|
||
நீடிய காவலன் போலும் - பெருமையுடைய நம் அரசன் போலும், சடைத்தலையான் வந்து - வந்து நம் வாயிலிடத்தானாயினான்; நம் கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் - அவன் நம் கோவலனே என்றாள் ஓர் குறுந்தொழில் செய்யும் இளையவள் ; |
||
பாடமை சேக்கையுட் புக்குத்தன் பைந்தொடி |
||
கோவலனும் - அங்ஙனம் வாயிலிடத்தானான கோவலனும், பாடு அமை சேக்கையுட் புக்கு - பெருமையமைந்த படுக்கையிடத்தே புக்கு, தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு - தன் காதலியின் வாட்ட முற்ற மேனியும் வருத்தமும் கண்டு, யாவும் - எல்லாம், சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி - வஞ்சம் பொருந்திய கொள்கையையுடைய பொய்த்தியோடுங் கூடியொழுகினமையால், குலம் தருவான் பொருட்குன்றம் தொலைந்த - நம் குலத்திலுள்ளார் தேடித் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவையெல்லாம் கெட்டதனாலாய, இலம்பாடு - வறுமை, நாணுத் தரும் எனக்கு என்ன - எனக்கு நாணைத் தருகின்றது என்று கூற ; |
"கண்ணகியின்
விடை"
|
நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி - (அவன் இங்ஙனம் கூறியதனை மாதவிக்குக் கொடுக்கும் பொருட் குறை பாட்டால் தளர்ந்து கூறினானாகக் கருதி) ஒளி பொருந்திய முகத்தே நன்மை பொருந்திய சிறிய முறுவலைத் தோற்றுவித்து, சிலம்பு உள கொண்மென - இன்னும் சிலம்பு ஓரிணை உள்ளன ; அவற்றைக் கொண்மினென்றுரைக்க ; |
"கோவலன்
மதுரை சென்று பொருள் ஈட்ட எண்ணியுள்ள தனது
கருத்தை வெளியிட்டு, விடியுமுன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லுதல்"
|
சிலம்பு முதலாகச் சென்ற கலனோ |
சேயிழை கேள் - சேயிழையே இதனைக் கேள், இச்சிலம்பு முதலாக - நீ கூறிய இச் சிலம்பை நான் வாணிக முதலாகக் கொண்டு, சென்ற கலனோடு உலந்த பொருள் ஈட்டுதலுற்றேன் - முன்பு நான் வாங்கியழித்தமையால் ஒழிந்த கலன்களையும் கெட்ட பொருளையும் தேடத் துணிந்தேன், மலர்ந்த சீர் மாட மதுரையகத்துச் சென்று - பரந்த புகழையுடைய மாடங்களையுடைய மதுரை யென்னும் பதியிடத்தே சென்று ; என்னோடு இங்கு ஏடு அலர் கோதாய் எழுகென்று - இதழ்கள் விரிந்த கோதையையுடையாய் அதற்கு நீ இப்பொழுதே இங்கு நின்றும் என்னோடு புறப்படுவாயாக என்று கூறி, நீடி வினை கடைக் கூட்ட - முற்பிறப்பிற் றான்செய்த தீவினை நெடுங்காலம் நின்று நெஞ்சை ஒருப்படுத்த, வியம் கொண்டான் -அவ்வினையினது ஏவலைக் கொண்டான் ; கங்குல் - இருளை, கனை சுடர் - ஞாயிற்றின் மிக்க ஒளி, கால் சீயாமுன் - அவ்விடத்தினின்றும் போக்குதற்கு முன் என்க. |
"வெண்பா" |
||
காதலி கண்ட கனவு கரு நெடுங் கண் |
||
வெண்பா |
||
(காதலி கண்ட ...... சீயாமுன்.) காதலி கண்ட கனவு - கண்ணகி கண்ட கனவு, கரு நெடுங்கண் மாதவிதன் சொல்லை வறி தாக்க - கரிய நெடிய கண்களையுடைய மாதவியின் சொல்லைப் பயனின்றாக்க, மூதை வினை கடைக் கூட்ட - பழவினை நெஞ்சை ஒருப்படுத்த, வியம் கொண்டான் கங்குற் கனை சுடர் கால் சீயாமுன் - கங்குலைச் சுடர் போக்குதற்கு முன் அவ் வினையின் ஏவலைக் கொண்டான். இவட்கு மேற்கூட்ட மின்மையால் கருநெடுங்கண் என்றார். சொல்லை வறிதாக்குதல் - வேனிற் காதையில், காலை காண்குவம் என்ற சொல்லைப் பயனின்றாக்குதல். |
||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக