நம்பியகப் பொருள்
நம்பியகப் பொருள்
தொன்மைத்தமிழ் நூலான தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் ஒரு பகுதியாக அகப்பொருளை விரிவாக விளக்கியுள்ளது. அடுத்துத் தோன்றிய இறையனார் அகப்பொருள் களவு - கற்பு எனும் இரு பிரிவுகளில் அகத்திணை குறித்த விளக்கம் வழங்குகிறது. அதன் பின் தமிழ்நெறி விளக்கம் என்னும் நூலொன்று சிறிய அளவில் அகப்பொருள் இலக்கணத்தைக் கூறுகின்றது. தொடர்ந்து கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நம்பி அகப்பொருள் என்ற நூலே அகப்பொருள் இலக்கணத்துக்கென்று உள்ள ஒரு தனிப்பெரும் நூலாகத் திகழ்கிறது.
இந்நூலின் ஆசிரியர் நாற்கவிராசநம்பி ஆவார். இவர் புளிங்குடி என்ற ஊரினர். உய்யவந்தான் என்பாரின் மைந்தர். சமண சமயத்தவர். தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர். ஆசுகவி - மதுரகவி - சித்திரக்கவி - வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் பெற்றவர். அது கருதியே ‘நாற்கவிராசன்’ என அழைக்கப்பட்டவர். நம்பி, என்பதே இவரது இயற்பெயர்.
நம்பி தம் அகப்பொருள் நூலுக்கு “அகப்பொருள் விளக்கம்” என்று பெயரிட்டுள்ளார். இவரே நூலுக்கு உரையும் எழுதியுள்ளார். தமது உரையில் பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைச் செய்யுட்களை உதாரணம் காட்டியுள்ளார். தம் நூலைப் பாண்டியன் குலசேகரன் அவையில் அரங்கேற்றியுள்ளார்.
தொல்காப்பியர் வகுத்துரைத்த அகப்பொருள் இலக்கணத்தை மனத்தில் கொண்டு, சங்கப் புலவர் செய்யுட்களில் காணப்பட்ட கூற்றுகளையும் சேர்த்துச் சிந்தித்துச் சூத்திரம் யாத்து உரையும் வகுத்தார் நாற்கவிராச நம்பி என்று, இந்நூலின் சிறப்புப்பாயிரம் கூறுவது குறிப்பிடத்தக்கது.
நூலின் அமைப்பு
இந்நூல் சிறப்புப்பாயிரத்தோடு தொடங்குகிறது. அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் 5 பகுதிகளைப் பெற்றுள்ளது. 252 நூற்பாக்களைக் கொண்டது. இவற்றிலிருந்து அகத்திணை இயல் (116 நூற்பாக்கள்) களவியல் (54 நூற்பாக்கள்) என்னும் இரண்டு இயல்களும் இலக்கணம் 3 (D021) என்னும் தாளுக்குரிய பாடப் பகுதிகளாக உள்ளன. எஞ்சிய வரைவியல், கற்பியல், ஒழிபியல் ஆகிய 3 பகுதிகளும் இலக்கணம் 4 (D022) தாளுக்குரிய பாடப்பகுதிகள் ஆகும்.
அகப்பொருள் வகை
அகத்திணைகள் மொத்தம் ஏழு; எனினும் அவற்றை இலக்கண நூலார் மூன்று பிரிவுகளில் அடக்கிக் காட்டுவர். அவையாவன :
1. கைக்கிளை
2. ஐந்திணை
3.
பெருந்திணை இம் மூன்றே எண்ணிக்கை அடிப்படையில் கூறும் போது கைக்கிளை – 1,ஐந்திணை – 5,
பெருந்திணை - 1என 7 பிரிவுகளாகிறது.
மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
அருந்தமிழ் அகப்பொருள், கைக்கிளை, ஐந்திணை
பெருந்திணை எனஎழு பெற்றித்து ஆகும் (1)
என்பது நம்பியகப் பொருள் நூற்பா!
4.
அகப்பொருள்
சொல்லப்படும் முறை
அகத்திணை ஏழினையும் புனைந்துரை, உலகியல் எனும் இரு முறைகளில் கூறலாம்.
5. புனைந்துரை
புனைந்துரை என்பது நாடகப் பாங்குடையது. புலவர் தாமே கற்பனையாகப் படைத்து மொழிவது.
6. உலகியல்
உலகியல் என்பது உண்மைத் தன்மை உடையது. இயல்பாக, உலகில் நடப்பதை உள்ளவாறே உரைப்பது.
அகப்பொருள் வகைகளில் முதலில் வைத்துக் கூறப்பட்டது ‘கைக்கிளை’ ஆகும்.
கைக்கிளை என்ற சொல்லைக் கை+கிளை எனப் பிரித்துப் பொருள் காண்பர். ‘கை’ என்பதற்கு ‘ஒரு பக்கம்’ என்றும், ‘சிறுமை’ என்றும் இருவகைப் பொருள்கள் உள்ளன. ‘கிளை’ என்பதற்கு ‘உறவு’ என்று பொருள். எனவே ‘ஒரு பக்கத்து உறவு’ அல்லது ‘சிறுமைத் தன்மையுடைய உறவு’ என்பதே ‘கைக்கிளை’ என விளக்கம் தருவர். இதனை ‘ஒரு தலைக் காமம்’ என்ற தொடரால் குறிப்பிடுகிறது நம்பியகப்பொருள் நூல்.
பெருந்திணை‘பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்’ என்பது இலக்கண விதி.
பொருந்தாத காதல் பெருந்திணை எனப்பட்டது. தலைவன் அல்லது தலைவி, பொருந்தாத வகையில் அன்பு காட்டுவது இது! இதுவே உலகில் பெருமளவில் (பெருவழக்காக) நிகழ்வதால் ‘பெருந்திணை’ எனப் பெயர் பெற்றது என்பர் வெள்ளை வாரணர்.
ஐந்திணை இதனை அன்பின் ஐந்திணை என்பர். தலைவன் தலைவி இருவரும் தம்முள் உள்ளம் ஒன்றி, அன்பு மேலிட்டு வாழும் காதல் வாழ்க்கை ஐந்திணை எனப்படும். இது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலங்களின் அடிப்படையில் பெயர் பெற்றுத் திகழ்கிறது. தமிழ் நூல்களில் அதிக அளவில் போற்றிப் பாடப் பெற்றவை இத்தகு அன்பின் ஐந்திணையே.
ஐந்திணைக்கும் உரிய பொருள்கள்
நிலங்களின் அடிப்படையில் பெயர் பெற்ற ஐந்திணைகளுக்கும் உரிய பொருள்கள் பல. அவற்றை மூவகைப்பட்ட பாகுபாடுகளுக்குள் அடக்கிக்காட்டுவது இலக்கண மரபு. அவை:
(1) முதற்பொருள்
நிலமும், நிலத்துக்குரிய பொழுதுகளும்
(2) கருப்பொருள்
நிலத்தில் உள்ள பொருள்கள்
(3) உரிப்பொருள்
நிலத்துக்குரிய ஒழுக்கம் இம் மூவகைப் பொருள்களும் நிலத்தின் அடிப்படையிலேயே வகுக்கப் பெற்றுள்ளன.
அகத்திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
விடைஅகத்திணை ஏழு வகைப்படும். அவை, கைக்கிளை -
1, ஐந்திணை - 5, பெருந்திணை - 1
ஆக மொத்தம் 7.
அகத்திணைக்குரிய முப்பொருள்கள் எவை?
விடைஅகத்திணைக்குரிய முப்பொருள்களாவன: முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.
கைக்கிளை - விளக்கம் தருக.
விடைஒரு பக்கத்து உறவு அல்லது சிறுமைத் தன்மை உடைய உறவு கைக்கிளை எனப்படும். இதனையே ஒருதலைக்காமம் என அழைப்பர்.
அன்பின் ஐந்திணை எவை?
விடைகுறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்தும் அன்பின் ஐந்திணை ஆகும்.
முதற்பொருளில் அடங்கும் இரு பொருள்கள் எவை?
நிலம், பொழுது என்னும் இரண்டுமே முதற்பொருளில் அடங்கும் இருபொருள்கள் ஆகும்
முதற்பொருள் ஐந்திணைகளுக்கும் உரிய மூன்று பொருள்களில் முதன்மையானது நிலம் ஆகும்.
நிலத்துடன், அந்த நிலத்துக்குரிய ‘பொழுது’ என்ற காலத்தையும் சேர்த்து ‘முதற்பொருள்’ என வழங்குவர். இதனை, நிலமும் பொழுதும் என முதல் இரு வகைத்தே (8) என்ற நம்பியகப் பொருள் நூற்பா இனிது விளக்கும்.
திணையும் நிலமும்
நிலம் என்பது முதற்பொருளின் பகுதி ; குறிஞ்சி முதலான 5 திணைகளுக்கும் உரிய நிலங்கள் எவை என்பதைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகிறது.
வரையே சுரமே புறவே பழனம்
திரையே அவையவை சேர்தரும் இடனேஎனஈர்
ஐவகைத்து அனையியல் நிலமே (9)
வரை மலைமலையும், அதைச் சார்ந்த இடமும் குறிஞ்சி
சுரம் மணல் மணலும் அதைச் சார்ந்த இடமும் பாலை
புறவு காடு காடும், காடு சார்ந்த இடமும் முல்லை
பழனம் வயல்வயலும் அதைச் சார்ந்த இடமும் மருதம்
திரை கடல்கடலும், அதைச் சார்ந்த இடமும் நெய்தல்இவ்வாறு ஐந்து திணைகளுக்கும் ஐவகைப்பட்ட நிலங்களை வகுத்துள்ளனர்.
திணையும் பொழுதும்
பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். அது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும்.
o
சிறுபொழுது
இது ஒரு நாளின் சிறுபிரிவு:
1.
மாலை
2.
யாமம் (நள்ளிரவு)
3.
வைகறை (அதிகாலை நேரம்)
4.
எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்)
5.
நண்பகல்
எனச் சிறுபொழுது 5 பிரிவுகளை உடையது.
6. பெரும்பொழுது
இது ஓர் ஆண்டின் உட்பிரிவு ஆகும்.
7.
இளவேனில் (சித்திரை, வைகாசி மாதங்கள்)
8.
முதுவேனில் (ஆனி, ஆடி மாதங்கள்)
9.
கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்)
10. கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்)
11. முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்)
12. பின்பனிக்காலம் (மாசி, பங்குனி மாதங்கள்)
ஐந்து திணைகளுக்கும் உரிய சிறுபொழுது, பெரும்பொழுதுகள் எவையெவை என்பதைக் கீழ்வரும் அட்டவணை விளக்கும்.
நிலம்
(அல்லது)திணை சிறுபொழுது
பெரும்பொழுது
குறிஞ்சி யாமம்
கூதிர், முன்பனி
பாலை
நண்பகல்
வேனில், பின்பனி
முல்லை
மாலை கார்
மருதம் வைகறை
கார்காலம் முதலான ஆறும் உரியன.
நெய்தல் எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்) கார்காலம் முதலான ஆறும் உரியன.
கருப்பொருள்
ஐந்து
திணைகளுக்கும்
உரிய
நிலங்களில்
வாழும்
உயிரினங்களும்
வழங்கும்
பொருள்களும்
‘கருப்பொருள்’
என
வழங்கப்படுகின்றன.
அந்தந்த
நிலங்களுக்கு
ஏற்ப
வேறு
வேறாக
விளங்கும்
அக்கருப்பொருள்களை
இலக்கண
நூல்கள்
பலவாறு
வகைப்படுத்தும்.
நம்பியகப்
பொருள்
14 வகையான கருப்பொருள்களைப் பட்டியல் இட்டுக் காட்டுகிறது. அவையாவன
·
ஆரணங்கு (தெய்வம்),
உயர்ந்தோர் , உயர்ந்தோர் அல்லோர், புள் (பறவை) , விலங்கு , ஊர் ,நீர்
·
பூ, மரம் ,
உணவு, பறை, யாழ்,
பண், தொழில்
குறிஞ்சி முதலான ஐவகைத் திணைகளுக்கும் (நிலங்களுக்கும்) உரிய கருப்பொருள்களின் தொகுப்பாகக் கீழ்வரும் பட்டியல் தரப்பட்டுள்ளது.
ஐந்திணைக் கருப்பொருள்கள்
உரிப்பொருள்
முப்பொருள் வகைப்பாட்டில் மூன்றாவதாக அமைவது உரிப்பொருள் ஆகும். ஐவகைப்பட்ட திணைகளுக்கும் உரிய ஒழுக்கங்களை உரிப்பொருள் என்று பெயரிட்டு வழங்குவர். அந்த ஒழுக்கங்கள் ஐந்திணை பற்றிய செய்யுட்களுக்கு உரிய பாடுபொருள் என்பதனாலும் உரிப்பொருள் எனப்பட்டது. அவ்வத் திணைகளுக்கு உரிமை உடைய ஒழுக்கங்கள் என்று விளக்கம் தருவதும் பொருத்தம் உடையதே ! (உரி = உரியது, உரிமை உடையது)
ஐந்திணை உரிப்பொருள்கள்
ஐந்திணைகளுக்கும் உரிய உரிப்பொருள்களைக் கீழ்க்காணுமாறு வகுத்துள்ளனர்.
·
குறிஞ்சிக்குரியது புணர்தலும், அதன் நிமித்தமும்
·
பாலைக்குரியது பிரிதலும், அதன் நிமித்தமும்
·
முல்லைக்குரியது இருத்தலும், அதன் நிமித்தமும்
·
மருதத்துக்குரியது ஊடலும், அதன் நிமித்தமும்
·
நெய்தலுக்குரியது இரங்கலும், அதன் நிமித்தமும்
சொற்பொருள் விளக்கம்
·
புணர்தல் தலைவனும் தலைவியும் கூடுதல்.
·
பிரிதல் தலைவன், யாதேனும் ஒரு காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்லுதல்.
·
இருத்தல் தலைவி, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டு இருத்தல்.
·
ஊடல் தலைவி, யாதேனும் ஒரு காரணம் கருதித் தலைவன் மீது கோபப்படுதல்.
·
இரங்கல் தலைவி, தலைவனது பிரிவைத் தாங்க இயலாது வருந்துதல்.
·
நிமித்தம் நிமித்தம் என்றால் அந்த ஒழுக்கம் தொடர்பான முன்/ பின் செயல்பாடுகள் என்று பொருள். 1.
குறிஞ்சிக்குரிய முதற்பொருள், உரிப்பொருள் பற்றி எழுதுக.
சிறுபொழுதின் வகைப்பாடுகள் எத்தனை? யாவை?
கார், இளவேனில், பின்பனி இவற்றுக்குரிய மாதங்களை எழுதுக.
இருத்தல், இரங்கல் - விளக்குக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக