வெள்ளி, 15 மார்ச், 2024

சீறாப்புராணம் இரண்டாம் பாகம் ஹிஜிறத்துக் காண்டம்

 

சீறாப்புராணம்

இரண்டாம் பாகம்  ஹிஜிறத்துக் காண்டம்

·                      இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய தமிழ் நூல் சீறாப்புராணம்.

·         சீறத் என்னும் அரபுச் சொல் தமிழ் மரபிற்கேற்பச் சீறா என்று வழங்கப்பட்டது.

·         சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருள், புராணம் என்பதற்கு வரலாறு என்பது பொருள்.

·         சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்று பொருள்.

·         சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை = மூன்று.

·         இந்நூல் விலாதத்துக் காண்டம் (பிறப்பியற் காண்டம்), நுபுவ் வத்துக் காண்டம் (செம்பொருட் காண்டம்), ஹிஜ்ரத்துக் காண்டம் (செலவியற் காண்டம்) என்ற மூன்று பெரும் பிரிவுகளை உடையது.

·         இந்நூலில் 5027 விருதப்பாக்கள் உள்ளன.

·         பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும் திருமணமும் விலாதத்துக் காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

·         வானவர் ஜிப்றாயில் மூலம் திருமுறை நபிகள் பெருமானார்க்கு அருளப்பட்டதும் அதன்பின் மக்கத்தில் நடந்தவையும் நுபுவ்வத்துக் காண்டத்தில் பேசப்படுகின்றன.

·         மக்கத்தை விட்டுப் பெருமானார் மதீனம் சென்றதும் தீன் நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்களும் பிறவும் ஹிஜ்றத்துக் காண்டத்தில் வரையப்பட்டுள்ளன.

·         சீறாப்புரானத்தில் நபிகளின் வல்லவு முற்றிலுமாகப் பாடி நிறைவு செய்யப்படவில்லை.

·         பனூ அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தார். அதுசின்ன சீறாஎன வழங்கப்படுகிறது.

உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு

·         உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.

·         செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதினார்.

·         நூல் முடிவுறும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.

·         பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது.

·         உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற என்பது பாக்களால் ஆன நூலையும் படைத்துள்ளார்.

விடமீட்ட படலம்

·         நபிகளின் நண்பர் = அபூபக்கர்

·         இருவரும் தங்கி இருந்த இடம், தௌர் மலைக்குகை.

·         குகையில் இருந்த ஒரு போனதின் வழியாக வந்த பாம்பு அபூபக்கரின் உள்ளங்காலை தீண்டியது.

·         அபூபக்கர் மயக்கம் அடையும் நிலையில் நபிகள் உறக்கம் களைந்து எழுந்து நடந்ததை அறிந்து கொண்டார்.

·         நபிகள் தனது எச்சில் தடவி அபூபக்கரை மீட்டார்.

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக