புதன், 3 அக்டோபர், 2018

அரிது அரிது - மென்திறன் பயிற்சி


திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் 
அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்னும் தலைப்பில் வழங்கப்பட்ட காணொளி .

திங்கள், 24 செப்டம்பர், 2018

முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை


“முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை”

                                                                                 முனைவர் வே. சண்முகம்,
                                                                                 உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
                                                                       திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி(நிலை 1),
                                                                       விருத்தாசலம் - 606 001.
அறிமுகம் 
உலகில் உள்ள மக்களிடையே நாகரிகம் வளர்ந்த நிலையில் பல்வேறு இனக் குழுக்கள் தோன்றின. அவ்வகையில் தோன்றி,கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் உள்ளோர் அனைவராலும் போற்றப்பட்ட உயரிய பண்பாட்டுக்கு உரியவர்கள் தமிழர்கள் எனில் அஃது மிகையன்று. உலக மக்கள் பலரும் இன்றளவிலும் உயரிய பண்பாட்டை எய்தாதுவீணே இருக்கும் நிலையில், பன்னெடுங்காலத்திற்கும் முன்பே உயரிய பண்பாட்டுக் கூறுகளைத் தன்னகத்தே கொண்ட பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள.; அவர்தம் அகம், புறம்சார்ந்த வாழ்வியல் நெறிகளில் உயிரினும் மேலான ஒழுக்கத்தைப்போற்றினர்.இவ்வகையில் தமிழர்களின் வாழ்வியல் அறங்களுள் ஒன்றாக மதித்துப் போற்றப்பட்ட“முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை”. என்னும் உயரிய நெறியை, ஆளுமை மிகுந்த பெண்பாத்திரங்களின் வழிநின்று விளக்கும் முகத்தான் இந்த ஆய்வுக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது
 முந்நீர்
முந்நீர் என்னும் சொல்லுக்கு ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் ஆகிய மூன்றையும் குறிக்கும் பொருள் உண்டு. எனினும,; கடல் என்னும் பொருளிலேயே முன்னோர்களால் இச்சொல்லாட்சி கையாளப்பட்டு வந்துள்ளது.இவ்வகையில்
                                   “முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை”1
என்று தொல்காப்பியரும,; 
                                       “முழங்குமுந்நீர் முழுவதும் வளைஇப் 
                                        பரந்து பட்ட வியன் ஞாலம்”;2
என்று புறநானூறும் முந்நீர் எனும் சொல்லைக் கடல் என்னும் பொருண்மையிலேயே குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது.
முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை
பழந்தமிழ் மக்கள் யாவரும்அகம், புறம் ஆகிய இரண்டு நிலைகளிலும் அறம் சார்ந்த வாழ்வையலையே உயிரினும் மேலானதாகக் கொண்டு ஒழுகினர். அவர்களுள் ஆண்மகன் பொருளீட்டுவதையே தலையான கடமையாகக் கொண்டவன.; பெண்ணானவள், கணவன் அதாவது தலைவன் ஈட்டி வந்த செல்வத்தை தன் குடும்பத்தின் வருவாய்க்குத் தக்க வகையில் பயன்படுத்தி இன்பத்தையும் அறத்தையும் மேம்படுத்திக் குடியோம்பல் செய்வாள்.இதனை,
                                    “வினையே ஆடவர்க்கு உயிரே 
                                   வாணுதல் மனையுறை மகளிர்க்கு
                                    ஆடவர் உயிர்”3
எனும் குறுந்தொகையின் பாடலடி தெளிவுபடுத்துகின்றது.

               இவ்வகையிலான  கற்பு சார்ந்த,பண்பட்ட வாழ்வியல் நிலையில் தலைவன் மேற்கொள்ளும் ஆறு வகையானப் பிரிவுகளில் தலைவன் எந்த வகையான பிரிவாயினும்,காலினும் கலத்தினும்சென்றாலும்; தலைவியின்; பாதுகாப்பு உள்ளிட்ட நலன்களைக்கருதி அவளை இல்லில் இருத்தித் தான் மட்டுமே பிரிவை மேற்கொள்வான். இங்குக் காலினும் என்பதற்கு நடந்தும், பறந்தும், காற்றுவெளி சார்ந்த வழியென்றும் கொள்ள இடமுள்ளது. ஆதலான் மண்ணுலகத்தவர், விண்ணுலகத்தவர் என்றப் பாகுபாடின்றித் தலைவன் எத்தகு தன்மையராக இருந்தாலும்;,முந்நீராகிய நீர் வழி (சீதை, புனிதவதி), நிலவழி (தமயந்தி),ஆகயம் சார்ந்த வழியாகிய எவ்வழியாயினும் (காயசண்டிகை),தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை. 

தலைமக்கள் கடன்
பண்டைய காலம் தொட்டு மூதாதையர்  வழி வந்த செல்வத்தை நுகர்தல் என்பது தலை மக்களுக்கு உரிய ஒழுக்கம் அன்று. அவரவர் வருவாய் வழி நின்று, இல்லறமாகிய நல்லறத்தை மேற்கொள்ளவேண்டும். மூதாதையர் சேர்த்து வைத்த செல்வத்திற்கு இளைய தலைமுறையினர் பாதுகாப்பாளர் தாமேதவிர,செலவு செய்வதற்கு உரியவர் அல்லர்.  அவ்வாறு இன்றி உயர்ந்தோர் வைத்த செல்வங்களை அதாவது சந்ததிக்கு உரிய செல்வங்களைத்தானே  உண்பார்களாயின், அவர்கள் உயிரோடு இருப்பினும் இருந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.இதனை,
                                 “ர உள்ளது சிதைப்போர்  உளர் எனப்படார்”4
என்ற குறுந்தொகைப் பாடலடி தெரிவிக்கின்றது.

வினையே ஆடவர்க்கு உயிர் ஆதலால்,ஆற்று நீர், ஊற்று நீர், கடல்நீர் ஆகிய மூவகையான நீர் வழியின் கண்ணும், தலைவியைக்காலினும்,கலத்தினும்; அழைத்துச் செல்வது என்பது கூடாது. இந்நிலையில் தலைவியை உடன் கொண்டு பெயரும் சூழல் ஏற்படின், அன்பின் மேலீட்டால் உரிய காரணத்தைக் கூறிப்பிரிவினைத் தவிர்த்தல் மிக நன்று. தலைவன் வினைமேல் செல்லும்போது தலைவி எவ்வகையிலும் இடையீடு செய்வதை விடுத்து,
                                          “கற்பும்  காமமும் நற்பால் ஒழுக்கமும் 
                                          மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின் 
                                          விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
                                          பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”5
எனும்  தொல்காப்பிய விதிப்படி, உயிரினும் மேலான கற்புநெறியைப் போற்றி ஒழுக வேண்டும். மாறாக, பெண்டிர் எக்காரணம் கொண்டும் பிரிவில் உடன் செல்வது நன்மைக்கு உரியதன்று என்பதற்குக்  கண்ணகி,சீதை,காரைக்கால் அம்மையார்,தமயந்தி, காயசண்டிகை உள்ளிட்ட ஆளுமை மிகுந்த பெண்பாத்திரங்கள் சான்றுகளாக உள்ளன.

முந்நீர் வழக்கில் கண்ணகி
               சோழ நாட்டு மன்னனுக்கு இணையான செல்வச் செழிப்புடைய குலத்தில் பிறந்த கோவலன் மற்றும் கண்ணகியின் இல்லற வாழ்வின் தொடக்கம் உலகத்துள்ளோர் யாவரும் வியக்கும் வண்ணம் சிறப்பாக அமைந்தது. எனினும் கலை ஆர்வலன் கோவலன் மாதவியின் மீது கொண்ட கொள்கையால் மலை போன்று இருந்த நிதிக்குவியல்களை இழந்தான்.கண்ணகி, கணவனின் கருத்தறிந்து நடந்தாளே தவிர, கோவலனை மாதவியின் மனையின்பால் செல்லாமல் தடுத்து நிறுத்தி நன்னெறிப்;படுத்தும் தன்மை இல்லாதவளானாள்.

 கோவலன் மாதவியோடு மனம் மாறுபட்டு மீளவும் தன்னிடம் வந்த போதும் கண்ணகி, காவல்தானே பாவையர்க்கு அழகு எனும் நிலையில் நல்ல குலமகளாக இருந்து கொழுநனைப் பேணினாள்.செல்வங்களை இழந்த நிலையில்,முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்பதை அறிந்த நிலையிலும் எழுகென எழுந்த கண்ணகி கோவலனோடு பாண்டியநாடு புகுந்தாள்.உடன்கொண்டு பெயரும் இத்தகைய  செலவு துன்பத்தைத் தரும் என்பதை உணர்த்த முயன்ற இளங்கோ, வையை என்னும் பொய்யாக் குலக்கொடி  கண்ணீரை மறைத்துப் பூவாடை அதுபோர்த்தி ஓடினாள் என்று கூறியதும், பாண்டியனின் மதில் மீதிருந்த கொடி வாரல் என்பன போல மறித்துக் கைகாட்டியதுஎன்று கூறியதும்இத்தகைய பிரிவு தவறென்பதைச் சுட்டிக்காட்டுவனவாகவே உள்ளன.

                    பண்டைய விதிகளை மீறிப் பொருளீட்டுதல் வேண்டி, வையையைக் கடந்து பாண்டிய நாட்டிற்குச் சென்ற கண்ணகியின் வாழ்வு சொல்லொணாத் துயரத்தை அடைந்ததனை நோக்கும்போது பண்டைய விதியாகிய முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை எனும் விதி மதிக்கத்தக்கதாக உள்ளது
முந்நீர் வழக்கில்சீதை
மிதிலை மாநகரில் சனக மகாராசனின் மகளாகப் பிறந்தவள் சீதையாவார். திருமகளின் வடிவம் பொருந்திய சீதாப்பிராட்டிக்கு வைதேகி, மைதிலி, சிறையிருந்த செல்வி என்னும் வேறு பெயர்களும் உண்டு. கார்முகில் பூத்து வரிவில் ஏந்தி வந்ததைப் போன்று வந்து உதித்த கார்மேகவண்ணன், ராமன் வில்லை ஒடித்து நங்கையருள்  நல்லாளாகிய சீதையை மணந்தான். இல்லறம் நல்லறமாகத் திகழ்ந்தது.அன்னை கைகேயி விடுத்த ஏவலால் இராமன் காடேக வேண்டியதாயிற்று. அன்பின் மிகுதியால்  தலைவனைப் பிரிய இயலாத சீதை,“பிரிதலைக் காட்டிலும் உயிர் செல்லுதல் நலம்”6எனும் உயரிய நோக்குடன்,
“பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
டுடனுயிர் போகுக”7
எனும் குறுந்தொகைப் பாடலின் தலைவியைப் போல,“அரிதே காதலர்ப் பிரிதல்”8என்பதை உணர்ந்து இராமபிரானுடன் கானகம் சென்றாள்.முந்நீர் வழக்கம் மகடூஉ  வோடு இல்லை என்னும் பண்டைய நெறியை மறந்து, அன்பின் மேலீட்டால் பிரிவில் உடன்பட்ட நிலையில் தலைமக்கள் இருவரும் மிகுந்த துன்பத்தை அடைந்தனர். தலைமக்கள் அடைந்த துன்பத்தை,
“தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்”9
எனும் இளங்காவடிகளின்  பாடல் அடிகள் தெளிவுபடுத்தக் காணலாம்.

முந்நீர் வழக்கில் மகடூஉ தனித்துப் பயணித்தல்
 காரைவனம் என்னும் சிற்றூரில் தனதத்தன் என்பான் மகளாகப் பிறந்தவர் புனிதவதியார் ஆவார்.  இளமைத்துடிப்பும், மயில் அன்ன சாயலும் கொண்ட புனிதவதி அவர்தம் செல்வம் நிலைக்குத்தகுந்த குடியில் பிறந்த பரமதத்தனை மணந்து இனிதே இல்லறம் நடத்தி வந்தார். நல்லறிவும், நற்குணங்களையும் ஒருங்கே கொண்டிருந்;த புனிதவதியார், அடியார் ஒருவர் தன் இல்லத்திற்கு வந்திருந்த நிலையில் அடியார்க்கு அமுது தயாராக இல்லாத காரணத்தால்;; மாங்கனிகளில் ஒன்றைக் கொண்டுவந்தது அமுது படைத்து அகம் மகிழ்ந்தார்.; 

மாங்கனிகளின் வாயிலாகப் புனிதவதியாரின் தெய்வத்தன்மையை உணர்ந்த பரமதத்தன் தன் இல்லில்;; இருந்து வாழாது, வணிக நோக்கத்தைக் காரணம் காட்டிப் புனிதவதியைத் தவிர்த்துச் சென்றான். உறவினர்கள் வழி பரமதத்தன் அழகிய மதுரை மாநகராகிய பழைய பதியில் வாழ்கிறான் என்பதை அறிந்து கணவனை நாடிச் சென்றார் புனிதவதி. புகாரிலிருந்து கணவனை இழந்த பொருளை மீட்க வையையைத் தாண்டிப் பயணித்த கண்ணகியைப் போல, புனிதவதிகணவனை மீட்க வேண்டி புகாரிலிருந்து வையையைக் கடந்து மதுரையை நோக்கிப் பயணித்தார். இப்பயணத்திற்கு முன்னர் கணவர் பரமதத்தன் இருக்கின்றான் என்ற நிலை இருந்தது. புனிதவதியும் முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்ற பண்டைய விதியைக் கடந்த நிலையில் பரமதத்தனைக் கண்டாள்;. ஆயினும் கணவனைத் தனக்கு உரியவனாகக் கொண்டாளில்லை. அவனோடு இன்புற்று வாழும் நிலை அவளுக்கு வாய்க்கவில்லை
 பண்டைய தமிழர் மரபு என்பது பெண்கள் இல்லில் இருந்து ஒம்புவதே அல்லால் மற்றில்லை. கணவனுடன் வந்த கண்ணகியின் வாழ்வில் கடுந்துயர் விளைந்ததைப் போல, இல்லில் இருந்து விருந்து ஓம்பவும் கணவன் வேண்டுமே என்று கணவனைத் தேடி வையை ஆற்றைக் கடந்து வந்த புனிதவதி கணவனைக் கண்டும், கணவன் மீண்டும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், பெண்ணை விட பேய் உருவம் மேல் என்று  வேண்டிப் பெற்ற நிகழ்வின் துணையுடன்முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லைஎன்பதன் உட்பொருளை இலக்கியங்கள் வழியாகப் பொருத்திக் காணமுடிகின்றது
முந்நீர் வழக்கில்; வித்யாதரர்கள்
காயசண்டிகை
காயசண்டிகை என்பாள் ஒரு வித்யாதரப் பெண். அவள் தன் கணவன் மருதவேகன் எனும் காஞ்சனனுடன் இந்திரவிழாவைக் காண வேண்டிப் புகார் நகருக்கு வந்திருந்தாள். விழா நிகழ்வுகளில் தன்னை மறந்த நிலையில் காயசண்டிகை,விருச்சிக முனிவர் உண்பதற்கு வைத்திருந்த நாவல் கனியை அறியாமல் மிதித்துச் சிதைத்துவிட்டாள். அந்த நாவல் கனி வியக்கத்தக்க தன்மையது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்க்கும் தன்மையது. அத்தகைய அற்புதம் வாய்ந்த நாவல் கனி சிதைக்கப்பட்டதைக் கண்டு வெகுண்டு எழுந்த முனிவர், பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் இருந்த நான் அக்கனியை உண்ண இருந்த நிலையில் நீ அந்தக்கனியைச் சிதைத்து விட்டாய். ஆதலால் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில் என் தவம் முடிந்து பசியானது தீரும் வரையில,; நீயும் தீராப் பசி நோயால் வருந்துவாயாக என்று கடுமொழி விடுத்தார். 
விழா நிகழ்வுகளைக் காண வந்த இடத்தில்காயசண்டிகை சாபம் பெற்ற நிலையில், அவளின் கணவன் மருதவேகன் இச்சாபம் தீரும் வரையில் நீ புறநகரில் இருப்பாயாக,பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து நான் வருகின்றேன் என்று கூறி விட்டு;  மேலுலகம் சென்றான்.  காயசண்டிகை முனிவரின் சாபத்தால் 12 ஆண்டுகள் யானைப்பசி என்னும் தீராத பசி நோயினால் வருந்தவேண்டியதாயிற்று.
முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை என்பது கண்ணகி, சீதை, தமயந்தி உள்ளிட்ட மானுடர்களுக்கு வகுக்கப்பட்ட அக இலக்கணமாயினும், விண்ணுலகில் இருந்துப் புகார் நகரம் வந்த மருதவேகனுக்கும் அவன் மனைவி காயசண்டிகைக்கும் பொருந்தியே அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகின்றது.
தொகுப்புரை:
Ø பழந்தமிழ் மக்கள் யாவரும்அகம், புறம் ஆகிய இரண்டு நிலைகளிலும் அறம் சார்ந்த வாழ்வியலையே உயிரினும் மேலானதாகக் கொண்டு ஒழுகினர். அவர்களுள் ஆண்மகன் பொருளீட்டுவதையே தலைவன் கடமையாகக் கொண்டவன.; பெண்ணானவள், கணவன் அதாவது தலைவன் ஈட்டி வந்த செல்வத்தைத் தன் குடும்பத்தின் வருவாய்க்குத் தக்க வகையில் பயன்படுத்தி இன்பத்தையும் அறத்தையும் மேம்படுத்திக் குடியோம்பல் செய்வாள் என்பதனை இலக்கியங்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.
Ø பண்டைய தமிழர் மரபு என்பது பெண்கள் இல்லில் இருந்து ஒம்புவதே அல்லால் மற்று வாழ்வு இல்லை என்பதனைக் கண்ணகி, சீதை, தமயந்தி உள்ளிட்டக் கதாப்பாத்திரங்கள் வாயிலாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Ø பண்டைய விதிகளை மீறிப் பொருளீட்டுதல் வேண்டிக் காலினும், கலத்தினும் வையையைக் கடந்து பாண்டிய நாட்டிற்குச் சென்ற கண்ணகியின் வாழ்வு சொல்லொனாத் துயரத்தை அடைந்ததனை நோக்கும்போது பண்டைய விதியாகிய முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை எனும் விதி மதிக்கத்தக்கதாக உள்ளது
Ø கணவனைத் தேடி வையை ஆற்றைக் கடந்து வந்த புனிதவதி கணவனைக் கண்டும், கணவன் மீண்டும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், பெண்ணை விடப் பேய் உருவம் மேல் என்று  வேண்டிப் பெற்ற நிகழ்வின் துணையுடன் முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை என்பதன் உட்பொருளை இலக்கியங்கள் வழியாகப் பொருத்திக் காணமுடிகின்றது
Ø முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை என்பது கண்ணகி, சீதை, தமயந்தி உள்ளிட்ட மானுடர்களுக்கு வகுக்கப்பட்ட அக இலக்கணமாயினும், விண்ணுலகில் இருந்து மண்ணுலகம் வந்தவர்களுக்கும்  பொருந்தியே அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகின்றது.
Ø வினையே ஆடவர்க்கு உயிர் ஆதலால்,ஆற்று நீர், ஊற்று நீர், கடல்நீர் ஆகிய மூவகையான நீர் வழியின் கண்ணும், தலைவியைக்காலினும்,கலத்தினும்; அழைத்துச் செல்வது என்பது கூடாது. இந்நிலையில் தலைவியை உடன் கொண்டு பெயரும் சூழல் ஏற்படின், அன்பின் மேலீட்டால் உரிய காரணத்தைக் கூறிப்பிரிவினைத் தவிர்த்தல் மிக நன்று என்பது ஆளுமை மிகுந்த கதாப்பாத்திரங்களின் வாயிலாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சான்றெண் விளக்கம்
1. தொல்காப்பியம்,நூ.980
2. புறநானூறு, பா. 18.1
3. குறுந்தொகை, பா. 135
4. குறுந்தொகை, பா.283
5. தொல்காப்பியம், நூ.1098
6. குறுந்தொகை, பா. 32:6
7. குறுந்தொகை, பா. 57
8. நற்றிணை, பா.5:7
9. சிலப்பதிகாரம், ஊர்காண்காதை, அடிகள்.46-49

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

விநாயகர் வழிபாட்டில் அறிவியல் செய்திகள்


விநாயகர் வழிபாட்டில் அறிவியல் செய்திகள்
                                   முனைவர் வே.சண்முகம்
                                           உதவிப்பேராசிரியர்
                                           தமிழ்த்துறைp>
                                           திரு கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி
                                           விருத்தாசலம் -606 001-- 9843175303
அறிமுகம்
       உலக மொழிகள் பலவற்றுக்கும் தலைமையான தன்மை கொண்ட தமிழ்மொழி கால எல்லைகளைக் கடந்த அனாதி மொழியாகவும், கடல் கடந்த பல நாடுகளில் ஆட்சி மொழியாகவும் விளங்கும் சிறப்புகளைக் கொண்டது. இத்தகைய பெருமைக்குரிய தமிழ் மொழிக்கு பக்திமொழி எனும் சிறப்பும் உண்டு. தமிழகத்தில் வளர்ந்த பக்தி நெறிகள் யாகும் அறிவு சார்ந்த நிலையில் இறைநிலையுடன் தொடர்பு படுத்தப் பட்டுள்ளன.

மக்களிடையே வழக்கில் உள்ள  புராண, இதிகாசங்கள் சார்ந்த செய்திகள் யாவும் மதத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் மனிதத்தை, மனிதனின் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர் வழிபாட்டுடன் தொடர்புடைய அறிவு சார்ந்த பக்தி நெறி தமிழகத்தில் மட்டுமல்லாது கடல் கடந்த எல்லைகள் பலவற்றையும் தனதாக்கிக் கொண்டு வளர்ந்தது. இவ்வகையில் இறை நம்பிக்கையுடன் நேரடியான தொடர்பு கொண்ட விநாயகர் வழிபாட்டில்  காணலாகும் அறிவியல் சார்ந்த செய்திகளை வெளிக்கொணரும் முகத்தான் இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது
 விநாயகர் பிறப்பு
 சைவ சமயத்தில் சிவபெருமான் முழுமுதற் கடவுளாயினும், விநாயகர் ஆதி பரம்பொருள் ஆவார். கணபதி என்னும் திருநாமத்தைக் கொண்டவரும் விநாயகரே ஆவார்  
      ஒருமுறை அண்ட சராசரங்களையும் கட்டிக்காக்கும் உமையவள் நீராடச் செல்கையில், தன்னுடைய பாதுகாப்பிற்காகத் தன் உடலிலிருந்து ஒரு பிடி சந்தனத்தைத் தேய்த்து எடுத்துப் பிடித்து வைத்துப் பிள்ளையாராக்கி, அதற்கு உயிரையும் கொடுத்துக் காவல் வைத்தார். அன்னையின் ஏவலை அடுத்து விநாயகர் காவலுக்கு நின்ற நிலையில், சர்வேஸ்வரன் சிவபெருமான் அம்பிகை நீராடும் பகுதிக்குச் சென்றார். காவலுக்கு நின்ற விநாயகர் சர்வேஸ்வரன் சிவபெருமானை மேலும் செல்ல விடாமல் தடுத்தார். சினம் கொண்ட சிவபெருமான் தன் உடைவாளை எடுத்து விநாயகரின் தலையைத் துண்டித்தார். நீராடல் முடிந்து மீண்டு வந்த உமையவள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பாலகன் விநாயகர் கிடப்பதைக் கண்டு சிவபெருமானிடம் உயிர் கொடுக்க வேண்டினார். சிவபெருமான் வேறு ஒரு தலையை விநாயகன் உடலில் பொருத்தி அதற்கு உயிர் கொடுத்தார் என்பது இறை நெறி சார்ந்த நம்பிக்கை.
 அறிவியலும் ஆன்மீகமும்
      இன்றைய அறிவியல் உலகில், ஒரு செல்லில் அதாவது ஒரு மரபணுவிலிருந்து கூட ஒரு உயிரையும் உடலையும் உருவாக்கும் வல்லமை பொருந்திய நமக்கு உருமாறுதல், கூடுவிட்டுக் கூடுபாய்தல், வியர்வையில் இருந்து உயிர் தோன்றுதல், நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றுதல், ஓர் உடலில் இருந்து மற்றோர் உடலில் ஒரு பாகத்தை மாற்றி வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் யாவும் நம்பத் தகுந்தவையாகவே உள்ளன. இவற்றான் அறிவியல் துறையிலான முன்னேற்றங்கள் பலவற்றிற்கும் ஆன்மீகம் சார்ந்த செய்திகள் அடித்தளமாகவே இருந்து வந்துள்ளன என்பது தெளிவு.
 தோற்றப் பொலிவு
      உலக உயிர்கள் அனைத்திற்கும் அடிப்படையான தன்மையுடன் அமையப் பெற்றது விநாயகர் வடிவமாகும். பல்வேறு உயிர்களை, உயிர்த் தொகுதிகளை தன்னகத்தே அடக்கி கொண்டு, யானையின் தலை, தேவ உடல், பூதத்தின் கை கால்கள் எனுமாறு பல்லுயிர்த் தொகுதியாலான உடலமைப்பை விநாயகரிடம் காணமுடிகின்றது.

ஒரு சிலர் விநாயகர் முகத்தில் உள்ள தந்தங்களை வைத்து, உமையொரு பாகனைப் போல விநாயகனும் ஆணும் பெண்ணுமாக இருக்கிறார் என்றும் கூறுவர். ஆயினும் புராணச் செய்திகளின் படி அஃது உண்மையன்று என்பதனை, விநாயகர் மகாபாரதம் எழுதிய கதையை ஒட்டி அறிந்துகொள்ள முடிகின்றது. அத்துடன்,

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் 
         நால்வாய் ஐங்கரத்தன் ஆறு 
தரு கோட்டு அம் பிறை இதழித் தாழ் சடையன்
 
         தரும் ஒரு வாரணத்தின் தாள்கள் 
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
 
         இரவு பகல் உணர்வோர் சிந்தைத் 
திருகோட்டு அயன் திருமால் செல்வமும்
 
         ஒன்றோ என்னச் செய்யும் தேவே

எனும் அருணந்திசிவத்தின் வாக்கும் விநாயர் வடிவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.

விநாயகரை வழிபாடு செய்ய இந்த வடிவம் தான் முக்கியம் என்பதனை நமது புராணங்கள் வரையறை செய்யவில்லை. அவரவர் வசதி, வாய்ப்புகளுக்குக்கு ஏற்ப மண், மஞ்சள், வெள்ளெருக்கு, மரம், தங்கம், வெள்ளி, சாணம் எனுமாறு பல்வேறு பொருள்களில், பல்வேறு வடிவங்களில் விநாயகரைச் செய்து வழிபாடு செய்கின்றனர். இத்தகைய எளிமையான  வழிபாட்டில் பயன்படும் பொருள்கள் பலவும் பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது
 ஐந்தி  ஆறு அடக்கம்
      உலகில் உள்ள உயிர்கள் யாவும் ஓரறிவு முதல் ஆறறிவு சார்ந்த உயிர் வகைகளுள் அடக்கம். இவ்வகையில் உலக உயிர்கள் யாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு பல்லுயிர்த் தொகுதியின் மூலமாக விளங்கும். பெருமைக்குரியவர் விநாயகர். உயிர்களின் இலக்கணத்தின் அடிப்படையில் யானை ஐந்தறிவு கொண்டது,  யானைத் தலையைக் கொண்டு வந்து சேர்த்து வைத்து பல்லுயிர்க் கணங்களின் தொகுதியாக உறுவாக்கப்பட்ட விநாயகர் ஆனைமுகத்தான் ஆயினும் ஆறறிவு கொண்டவன்  என்று விநாயக புராணம் கூறுகின்றது.
              எண்சாண் உடலுக்குச் சிரசே பிரதானம் என்னும் பண்டைய நெறியின் அடிப்படையில் விநாயகனின் உடல் யானையைத் தலையைச் சார்ந்துள்ளது. விநாயகன் ஆனைமுகத்தான் ஆயினும், அன்னையும் பிதாவும் அகில உலகமும் ஆவார்கள் என்றவன். ஆதலான் அறிவின் பயன்பாட்டின் அடிப்படையில் ஆனைமுகத்தான் ஆறறிவினன் ஆனான்
 உடலமைப்பைக் கொண்டு, உருவத்தைக் கண்டு ஒருவரை எள்ளி நகையாடக் கூடாது எனும் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக விநாயகன் ஐந்தினுள் அடக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பு

அமைவிடம் சார்ந்த அறிவியல்

மனித நாகரிகம் ஆற்றங்கரையை ஒட்டி நாகரிகத்தால் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதுடன் மனிதர்களின் வாழ்வியல் நெறிகளும் இயற்கையுடன் நேரடியாக தொடர்பு கொண்டே அமைந்துள்ளது. இத்தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே மூலப் பரம்பொருள் விநாயகனின் இருப்பிடமும் ஆற்றங்கரையை ஒட்டியோ அல்லது தெருக்கள் கூடும் சந்திப்பிலோ,  வேப்ப மரமும் அரச மரமும் இணைந்திருக்கும் இடத்திலோ அமைவதாயிற்று
      அதிகாலையில் துயில் எழுதல், ஆற்றுநீரில் அதாவது குளிர்ந்த நீரில் குளித்தல் உள்ளிட்ட செயல்கள் யாவும் உடல் சூட்டைத் தணிக்கும் என்பதாலும், இறைவன் மீதான வழிபாட்டில் கவனம் செலுத்தும்போது மனம் அமைதி பெறுவதோடு காமம், குரோதம் ஆகிய பன்புகள் மறைந்து இறையன்பு பிறக்கும் என்பது வெளிப்பாடு. வேப்ப மரமும், அரச மரமும் இணைந்து இருக்கும் இடத்தில் உள்ள இறைவனை அதிகாலை வேளையில் சுற்றி வந்து வணங்கும் போது நல்ல காற்று மக்களுக்குக் கிடைக்கின்றது. அத்துடன் அரச மரத்தின் காற்று கர்ப்பப்பையில் இருக்கும் குறைபாடுகளையும் சரி செய்யும் இயல்புடையது. இத்தகைய சிறப்பினை வெளிப்படுத்தும் நோக்கில், அரச மரத்தைச் சுற்றி வந்து அடி வயிற்றைத் தடவிப் பார்த்தாளாம் எனும் வழக்கும் மக்களிடையே இருந்து வருவதைக் காணமுடிகின்றது. இவற்றான், விநாயகர் வழிபாடு என்பது இறை வழிபாடு என்ற நிலையில் உடலையும், மனதையும் வலுப்படுத்தும் பயிற்சிக் களமாகத் திகழும் நிலையைக் காணமுடிகின்றது

வழிபாட்டு முறைகளில் அறிவியல்
 களிமண் விநாயகர்
      காலம் தோறும் விநாயகர் வடிவம் களி மண்ணால் செய்யப்படுவது வழக்கம். திருவிழா நிகழ்வுகள் முடிந்தவுடன் கடவுள் வடிவிலான களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட விநாயகரை நீர்நிலைகளிலோ அல்லது கடலிலோ கரைத்து விடுவது மக்களின் வழக்கம். இந்தப் பூவுலகில் கடவுளுக்கே இத்தகைய நிலையா? என்று எண்ணக்கூடாது. உலகியல் வாழ்வில் யாருக்கும், எதுவும் நிலையில்லை எனும் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இத்தகைய வழிபாட்டுமுறை மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உலகப் படைப்புகள் யாவும் ஒரு மூலத்திலிருந்து உருவானவையே. ஒன்றிலிருந்து மற்றொன்று தோற்றம் பெற்றுள்ளது. ஒரு பொருள் எந்த மூலத்திலிருந்து தோற்றம் பெற்றதோ முடிவில் அப்பொருள் அங்கேயே சென்று ஒடுங்கும் என்ற இயற்கையின் நியதியை அகிலத்தில் வாழ்வோர்க்கெல்லாம் உணர்த்தும் வகையில் களிமண் விநாயகர் வழிபாடு மக்களிடையே இன்றளவும் வழக்கில் இருந்து வருகின்றது.
 அருகம்புல்  வழிபாடு
 சிறு புல் தானே என்று அருகம் புல்லை அற்பமாக எண்ணி மிதித்துச் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில், சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற வாக்கினுக்கு வலிமை தரும் வகையில் இறைவன் அருகம் புல்லைத் தனக்குரியதாக மதித்து ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன், அருகம் புல் தனது உலக உயிர்களின் உடல் சூட்டைத் தணிப்பதுடன் காமம், குரோதம் உள்ளிட்ட இழிந்த பண்புகளையும் போக்கும் வல்லமை உடையது ஆதலால் பரம்பொருளாகிய விநாயகருக்கு அருகம்புல் உகந்தது ஆயிற்று.

  எருக்கம் பூ வழிபாடு
      எருக்கம் மலர் ஒரு வகையான காட்டுப் பூ வகையைச் சார்ந்தது. மனமில்லாத மலர், கசப்புத் தன்மையுடையது என்பன போன்ற பொதுமையான தன்மையால் மனிதர்கள் எருக்கம் மலரை விரும்புவது இல்லை. எருக்கம் மலரின் மருத்துவம் சார்ந்த மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் முகத்தான் பரம்பொருள் விநாயகர் எருக்கம் மலரைத் தனக்குரிய விருப்பத்துக்குரிய மலராக வழிபாட்டுக்கு ஏற்றுக்கொண்டார்

  மோதகம் படைத்தல்
 எளிமையின் வடிவமாகத் திகழும் விநாயகப் பெருமானுக்கு என்று தனிப்பட்ட வழிபாட்டு முறைகள் இல்லை. நம்மிடம் என்ன பொருள் உள்ளதோ அதனை வைத்து வணங்கலாம். ஔவையார்,
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே
  நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
என்னும் பாடல் வழியாக விநாயகப் பெருமானுக்குப் பிடித்த உணவுப் பொருள்களாக, குறிஞ்சி நிலத்தில் கிடைத்த பால்,
 முல்லை நிலத்தில் கிடைத்த தேன்,
மருத நிலத்தில் கிடைத்த பாகு,
             நெய்தல் நிலத்தில் கிடைத்த பருப்பு (தேங்காய்)
      எனுமாறு தமிழகத்தின் நானிலத்திலும் விளைந்த பொருட்களைத் தந்து மகிழ்வதைக் காணலாம். இவையே அன்றி அவல், பொறி உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு விநாயகருக்குப் படையல் இட்டு மக்கள் மகிழ்வெய்துவதுண்டு. எனினும் விநாயகருக்குப் பிடித்தமான உணவுப் பொருள் மோதகம் கொழுக்கட்டை ஆகும்.

        மோதகம் விநாயகர் வழிபாட்டில் வழிபடு பொருளாக இருப்பதற்குரிய காரணமும்  உண்டு. மோதகம் எனும் கொழுக்கட்டையின் மேற்புறம் மாவுப்பொருள் அதாவது புரோட்டின். இத்தகைய மாவுப்பொருள் உலக மாயையைக் குறிக்கும்: அதன் உள்ளே இருக்கும் வெல்லம் கலந்த பூரணம் உண்மையாகிய பரம் பொருளை உணர்த்தும் இத்தகைய உண்மையை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் மோதகம் படைத்தல் என்னும் வழிபாட்டு முறை விநாயகப் பெருமானுக்கு இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இத்தகைய வழிபாட்டினை, மோதகம் படைத்து வழிபடும் முறையை முதன் முதலில் செய்தவர் வசிஷ்டரின் மனைவி அருந்ததி என்பரே ஆவார்.



 தோப்புக்கரணம் போடுதல்
 விநாயகப் பெருமானை வழிபடும் பக்தர்கள் பரம்பொருளான விநாயகரை மகிழ்விப்பதற்காகத் தோப்புக்கரணம் போடுகின்றனர். இத்தகைய வழிபாட்டு முறையில் திருமாலுக்குச் சக்கரம் கொடுத்த விகடசக்கர விநாயகர் எனும் புராணக்கதை மறைந்திருந்தாலும், தோப்புக்கரணம் போடும் பழக்கமானது உடலையும் மனதையும் வலுப்படுத்தும் உடற்பயிற்சியாக இருக்கின்றது. இன்றளவும் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு, தலையில் குட்டிக் கொள்ளுதல் ஆகிய பழக்கமும்  இருந்துவருவதைக் காணப்படுகின்றது.
இரண்டு காதுகளையும் கையால் பிடித்துக் கொண்டு, விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போடும்போது; கைகளால் காதுகளை அழுத்திப் பிடிக்கும் நிலையில், காதின் வழியாக மூளைக்குச் செல்லும் நரம்புகள் தூண்டப்பெற்று இரத்த ஓட்டம் சரிசெய்யப்படுகின்றது. அதன் காரணமாக அறிவு வளர்ச்சி பெறுகிறது. ஒளவையார் அருளிய,
வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்    
         நோக்கு உண்டாம் மேனி நுடங்காது -
  பூக்கொண்டுதுப்பார்          
     திருமேனித் தும்பிக்கையான் பாதம்
     தப்பாமல் சார்வார் தமக்கு.
எனும் பாடல் வரிகள் விநாயகர் வழிபாட்டில் காணலாகும் அறிவியல் செய்திகளுக்குச் சான்றாக அமைந்துள்ள தன்மை புலனாகின்றது.  .
.
 முடிவுரை
      உலகில் உள்ள இறைநெறி சார்ந்த மார்க்கங்கள் பலவற்றுள்ளும் இந்து மதம் தலை சிறந்த அறிவு சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. அத்துடன் விநாயகப் பெருமானை வழிபட்டால் விதியையும் வென்று வாழலாம் என்ற நோக்குடன் விநாயகர் வழிபாடு இன்றளவும் வழக்கில் உள்ள தன்மையை அறிந்து கொள்ளமுடிகின்றது. 
விநாயகர் பிறப்பு, விநாயகர் வடிவம், விநாயகர்க்கு உரிய உணவு, விநாயகர்க்கு உரிய வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட ஆன்மீகம் சார்ந்த செய்திகள் யாவும் அறிவியல் சார்ந்த உண்மைகளையும் புலப்படுத்தும் வண்ணம் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.
 மக்களிடையே வழக்கிலுள்ள புராணங்களும் இதிகாசங்களும் வெறும் வெற்றுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் சார்ந்த செய்திகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.



வெள்ளி, 7 செப்டம்பர், 2018

சைவ சமய இலக்கியங்களில் காணலாகும் கற்பு நெறி


irt rka ,yf;fpaq;fspy; fhzyhFk; fw;G newp
KidtH. Nt.rz;Kfk;>
cjtpg;NguhrpupaH> jkpo;j;Jiw>        jpU nfhsQ;rpag;gH muR fiyf;fy;Y}up>
tpUj;jhryk; - 606 001.
mwpKfk;:
     cyf nkhopfSs; jkpo; nkhop gf;jpnkhop vDk; ngUikf;Fupa nkhopahFk;. ,j;jifa jkpo; nkhopapy; Njhd;wpa ,yf;fpaq;fs; gyTk; rKjhaj;jpd; fhyf;fz;zhbfshf tpsq;Fk; jd;ikad. mt;tifapy; cyfpay; tho;thfpa ,k;ikf;Fk;> mjd; gadhfpa kWikf;Fk; mbj;jskhf ,Ue;J tho;tpy; Vw;wq;fisg; ngw;Wj;jUk; ty;yik gf;jp ,yf;fpaq;fSf;F cz;L. kz;zpd; kjq;fSs; xd;whfpa irt rkak; rhHe;J vOe;j ,yf;fpaq;fs; ahTk; mDgtj;jpd; ntspg;ghLfshfTk;> tho;tpay; rhHe;j ,d;g Jd;gq;fSld; Neubahd njhlHGila ,yf;fpaq;fshfTk; kpspHfpd;wd. Mjyhd; ,r;r%fk; Nkd;ikAw;W ca;Ak; nghUl;L> irt rka ,yf;fpaq;fspy; fhzyhFk; fw;G newp Fwpj;J MAk; Kfj;jhd; ,e;j Ma;Tf;fl;Liu mikf;fg;gl;Ls;sJ.
irt rka ,yf;fpaq;fspy; fw;G newp:
   1.   tpehafH gpwg;G: 
 mz;l ruhruq;fisf; fhf;Fk; mk;gpif xU ehs; ePuhlr; nry;ifapy; xUtUk; ghJfhtYf;F ,y;yhikahy; jd; clypdpd;W Nja;j;J vLj;j mOf;ifg; gpbj;Jg; gps;isahuhf;fpg; ghJfhty; itj;Jtpl;L ahH te;jhYk; cs;Ns tplhNj vd;W fl;lisapl;Lr; nrd;whs;. mg;ghyfDk; ths; jhq;fpg; ghJfhty; ,Ue;jhd; vDk; ,r;nra;jpiar; rptGuhzk;> tpehafH Guhzk;> fe;jGuhzk; cs;spl;l ,yf;fpaq;fs; njuptpf;fpd;wd.
 tpidNkw; nrd;w Mltd; tpid Kbj;J kPSk; tiuapy; ,y;ypy; Mw;wpapUf;Fk; jiytp jk;ikj;jhNk fhj;Jf;nfhz;L xOFk; mwk; rhHe;j #oypy;>
rpiwfhf;Fk; fhg;Gvtd; nra;Ak; kfspH
epiwfhf;Fk; fhg;Ng fhg;G   (jpUf;Fws;. vz;:57)
vDk; ts;Stg; ngUkfdhupd; thf;fpDf;F muz; mikg;gijg; Nghy mk;gpifapd; nray;fs; mike;jpUg;gJld;>; jd;idAk; jhd; rhHe;j #oiyAk; jhNd fhj;Jf;nfhs;s Kide;Js;s jd;ik jkpoH jk; caupa gz;ghl;L newpfis xl;bNa mke;Js;sJ.
2. rptdpd; eldk;:
Mde;jj; jhz;ltk;:
     jhUfhtdj;J KdptHfspd; Mztj;ijr; rptngUkhd; mopf;f Kw;gl;l mstpy; jhUfhtdj;jpy; ,Ue;j KdptHfs; Nts;tpj; jPapy; ,Ue;J kjahid> khd;> Kayfd>; cLf;if> jP Kjyhdtw;iwj; Njhw;Wtpj;Jr;  rptngUkhd; kPJ VtpdH. rptngUkhNdh kjahidiaf; nfhd;W mjd; Njhiy cupj;Jg; NghHj;jpf;nfhz;L> Vidatw;iwj; jupj;Jf;nfhz;L> Mztj;jpd; tbthfpa Kayfd; kPJ jk; tyf;fhiy Cd;wp> ,lf;fhiyj; J}f;fpathW eldkhbdhH.
     jpy;iyr; rpw;wk;gyj;jpy; tpahf;ughjH> gjQ;ryp KdptHfSf;Ff; fhl;rp juNtz;b gilj;jy;> fhj;jy;> mopj;jy;> kiwj;jy;> mUsy; Mfpa Ie;njhopy; ,aw;Wk; jhz;ltkhfpa Mde;jj; jhz;ltj;ij MbaNghJk; Kayfd; kPJ tyf;fhiy Cd;wpNa  MbdhH.
     jhUfhtdj;J KdptHfspd; Mztj;ij mopf;f Mba epiyapYk;> jpy;iyr; rpw;wk;gyj;jpy; tpahf;ughjH> gjQ;ryp KdptHfSf;F mUs; ju tpUk;gp Mba Mde;jj; jhz;ltj;jpYk; ciknahU ghfdhfpa gukd; tyf;fhiy Cd;wpNa fspelk; Gupe;Js;shH. ,q;F Kayfdhfpa khw;whd; kPJ ,lg;ghfj;jpw;F cupa cikats; ghjk;  gLjy; $lhJ> mt;thU khw;whd; cly; gLkhapd; m/J rf;jpahfpa mtsJ fw;Gj; jpwj;jp;w;F ,Of;fhFk; vd;gjhy; jkf;Fupa tyJ ghfj;jpd; fhiy Cd;wp <rd; eldkpl;l jd;ikahy; gf;jp ,yf;fpaq;fspd; top epd;W caupa gz;ghl;Lj; jpwk; Gyg;gLj;jg;gl;Ls;sJ.

 CHj;Jtj; jhz;ltk;:
     cyfpd; ikag;Gs;spahd jpy;iyr; rpw;wk;gyj;jpy; xUrkak; rptDf;Fk; rf;jpf;Fk; ,ilNa eldg; Nghl;b ele;jJ. eldg; Nghl;bf; fLikahd cf;fpu epiyia mile;jJ.
ngz;ZU xU jpwd; Mfpd;W: mt;TUj;
jd;Ds; mlf;fpf; fuf;fpDk; fuf;Fk; (GwehDW:flTs; tho;j;Jg;ghly;.7-8)
rptdpd; xU ghjpahfpa rf;jpAk; Nghl;bf;F cupats; Mdjhy; fq;ifiaj; jiyapy; jhq;fpa xU$whfpa rptd; rw;W rpukj;Jf;F cs;shdhH. Nghl;b rkepiyapNyNa njhlHe;jjhy; rptd; jd; fhjpy; mzpe;jpUe;j Fz;lyj;ijf; fPNo tpor;nra;jhH. ehl;baj;jpd; CNl jd; fhy; tpuyhNyNa Fz;lyj;ij vLj;Jf; fhjpy; khl;bdhH.
     ehl;bag; Nghl;bapd; CNl rptd; jd; fhiyj;J}f;fp caHj;jpf; fhjzpia khl;bajhy; rf;jpAk; mt;thW nra;aNtz;baJ fl;lhakhapw;W. vdpDk; Njthjp NjtHfs;> KdptHfs; cs;spl;NlhH mlq;fpa rigapy; rf;jp jd; fhiyj;J}f;fp caHj;j Kaw;rp nra;atpy;iy. fhuzk; jkpo;g;gz;ghL rf;jpNjtpiaf; fhiy caHj;jtplhJ jLj;jJ. rf;jpNjtp gz;ghL Fwpj;Jr; rw;W Nahrpj;j mstpy; rptngUkhd; ehl;bag; Nghl;bapy; ntd;wjhf mwptpf;fg;gl;lhH. ,e;j ehl;bak; CHj;Jt jhz;ltk; vd;Wk; ehl;ba rhj;jpuj;jpy; yyhl jpyfk; vDk; jhz;ltk; vd;Wk; Fwpg;gplg;gl;Ls;sJ. Guhzr; nra;jpAld;; njhlHGila ,f;fijf;fhd gy rpw;gq;fs; jpy;iy eluhrH Myaj;jpy; rhd;whjhukhf cs;sd.
     CHj;Jt jhz;ltkhapDk> ctifapd; mbg;gilapyhd jhz;ltkhapDk; ngz;bH jk; ,ay;gpdpd;W vy;iy kPWjy; $lhJ vd;gJld;>
fw;ngdg; gLtJ nrhy; jpwk;ghik     (nfhd;iwNte;jd;)
vDk; gz;ila kuig xl;b> ntw;wpapd; tpspk;gpy; epd;wNghJk; rf;jpNjtp caupa jkpoHjk; gz;ghl;ilf; fhf;f Kad;w jpwk; NghHWjw;FupaJ.

3. rptd; fhyidf; fhyhy; fbe;jik:
kpUfz;L KdptH kfd; khHfz;NlaDf;F MAs; gjpdhW msNt vd;gJ njupa te;jJ. khHfz;Nlad; rpt gf;jdhjyhd; Fwpg;gpl;lthW MAs; KbAk; ehspy;> Nrho tsehl;by; cs;s jpUf;flt+H tPul;lk; vd;w xU jyj;ijr; rhHe;J <rdpd; jpUNkdpia tpl;L tpyfhJ fl;bj; jOtpf;nfhz;lhd;.mwj;jpdpd;W mZtsTk; jtwhj jUkuhrdhfpa vkjUkNdh khHfz;Nlad; capiuf; ftHe;J nry;yNtz;bg; ghrf; fapw;iw tPrpdhd;.

vkjUkd; tPrpa ghrf;fapW khHfz;NlaDld; rptypq;fj;jpAk; NrHj;J ,Oj;jJ. mt;tstpy; rptypq;fj;jpypUe;J ntspg;gl;l guk;nghUs; khHfz;NlaDf;fhff; fhyidf; fhyhy; fbe;jhd;. ,jid>
fhyhw; fhyidf; fha;e;j fLe;joy;
gpok;gd;d Nkdpr; nra;aNd                    (jpUthrfk;. mUs;gj;J:gh.9)
fhyd; khHgpilr; rptd; foy;gl                    (Njthuk;:6.29.12)
fhyid XUijapy; capH tPL nra;thH foyd;         (Njthuk;:3.319.2)
vd tUk; njhlHfs; Fwpf;ff; fhzyhk;.
     khHfz;Nlad; tuyhw;wpy; fhyid mk;gpifapd; ghfkhfpa ,lJ fhyhy; cijj;jjhfj; jpUf;flt+H tPul;lj; jyGuhzk; $Wfpd;wJ. Vida ,yf;fpaq;fs; foyhd; cijj;jjhff; $Wfpd;wd. vt;thwhapDk; khHfz;NlaDf;F mUs;jUk; epiyahjyhy; <rd; ciknahU ghfdhfj;jhd; ,Ue;jpUg;ghH vd;gjpy; Iakpy;iy.
     mbatDf;fhfTk;> jhd; rhHjpUf;Fk; rf;jpAld; NrHj;Jk; ghrf;fapW tPrg;gl;ljhy; tPuf;foyhd; vkjHkidj; fz;bf;fTk;> jz;bf;fTk; cijj;jpUf;f tha;g;Gs;sJ.
 mk;gpifapd; ghjNk cijj;jJ vdpDk;> khw;whdpd; ghrf;fapw;wpypUe;J gf;jd; khHfz;Nlaidf; fhf;fTk;> guk;nghUSld; jd;idf; fhj;Jf;nfhs;sTk; Ntz;b kq;ifaH NghH Gupjy; jtwd;W.
     mwk; fhf;f te;j vkjUkidr; rptd;> rf;jp ,Utupy; ahH jz;bj;jhYk; mwk; ghjpf;fhjh vdpd; mjw;Fk;
                mwj;njhL epw;wy;     
vd;nwhU epiy cs;sJ. ahH ahuplk;> ahH nry;yNtz;Lk; vd;w tpjpia xl;br; rpt mbatdpd;; capiuf; ftHe;J nry;y rptfzq;fs; te;jpUe;jhy; gpioapy;iy> khwhf vkjUkNd tUjy; gz;ghl;Lg; gpioahtJld; Mztj;jpd; milahsKk; MFk;. Mjyhd; ciknahUghfd; ve;jf;fhyhy; cijj;jpUe;jhYk; fw;G newpf;Fj; jFjpahdNj. 
4. fz;zg;gH fz; ,le;;j epiy:
nghj;jk;gp ehl;L cLg;g+H vDk; Cupy; jpz;zd; vDk; Ntl;Ltd; xUtd; tho;e;J te;jhd;. Ntl;ilf;Fr; nry;Yk; topapy; fhsj;jp kiyNky; rptypq;fj;ijf; fz;lhd;. mstpyhj gf;jp nfhz;lhd;. jpz;zdpd; gf;jpapd; Moj;ijr; Nrhjpf;f tpUk;gpa <rd; jd; tyf;fz;zpy; FUjpia tbar; nra;jhH. jpz;zNdh jdf;Fj;njupe;j %ypif kUj;Jtq;fisr; nra;jhd;. gadpy;yhj epiyapy; jd; fz;fspy; xd;iw mk;ghy; Njhz;bnaLj;J FUjp tbe;j <rdpd; fz;zpy; itj;jhd;;. FUjp tbtJ epd;wjhy; Nguhde;jk; mile;jhd;.
jpz;zdpd; gf;jp NkyPl;il cyFf;F czHj;j tpUk;gpa <rd; jd;Dila ,lJ fz;zpy; FUjpia tbar;nra;jhH. jpz;zd; mt;tstpy; mjpHe;jhYk; me;j ,lJ fz;izAk; rup nra;a Ntz;Lk; vDk; Kidg;gpy; mk;ig vLj;J jd; ,uz;lhtJ fz;izAk; Njhz;b vLj;J itf;f Kad;whd;. ,f;fhl;rpaf ;fz;l <rd; epy;Y fz;zg;g> epy;Y.. fz;zg;g vd;W jLj;J epWj;jp> jd; tyg;gf;fkhf ,Ug;ghahf vd;W gzpj;jhH.
,q;F jpz;zd; md;gpd; NkyPl;lhy; fz;zg;guhdhd;. md;gpYk; gf;jpapYk; Nkypl;l jd;ikahd; fz;zg;gUf;nfd tyg;ghfj;jpy; epiyahd ,lk; je;jhH <rd;. mj;Jld; md;ghy; md;idapd; ghfkhfpa ,lg;ghfkhfpaf; fz;izf; fhyhy; njhlTk; ciknahU ghfdhfpa <rDk; rf;jpAk; ,ire;Js;sdH.
jd;dykpd;wp vy;yh capiuAk; jk;Kapuha; vz;zp ahnuhUtH ctf;fpd;whNuh> cjTfpd;whNuh mtupy; cj;jkd; Nfhapy; nfhs;tjhy; ghy; Ngjk; fhzyhfhJ vDk; caupa Nehf;fhYk;> md;gpy; cUFk; Foe;ijia xg;gf; fz;zg;gH Fiotjhy; rf;jpahfpa jhiag; ghy; ghFghbd;wpj; njhl;L kUj;Jtk; ghHf;Fk; ey;yUs; tha;f;fg; ngw;Ws;shH.;

5.  gpUq;fp KdptH tz;L tbthd epiy:
gpUq;fp KdptH rptid kl;LNk topgLk; jd;ikaH. ehSk; <rid neQ;rpy; epWj;jp topgLk; jPtpu gf;jH. ,e;epiyapy; ,iwtp rf;jp jtk; nra;J <rdpy; ghjpahf mHj;jehup tbtk; ngw;whH. ,jid
ePyNkdp thypio ghfj;J xUtd; (Iq;FWE}W> flTs; tho;j;Jg;ghly;)
vDk; ghly; tupapd; thapyhfTk;> gd;dpU jpUKiwfs;; topepd;Wk; fhzyhk;.
<rdpy; ghjpahf rf;jp mHj;jehup tbtk; ngw;w epiyapYk>; gpUq;fp KdptH ,UtiuAk; NrHj;J topgl tpUk;gtpy;iy. khwhf tz;L tbntLj;J ,iwtd; gFjpiaj; Jisj;J topgl;L te;Js;shH. ,jw;Fupa rhd;whfj; jpUey;Y}upy; cs;s rptypq;fj;jpy; tz;L Jisj;jjw;fhd milahsj;jf; fhzKbfpd;wJ.
gpUq;fp KdptH fijapy; rptdpd; ghfj;jpid kl;LNk Jisj;Jr; Rw;wpr; nry;tjhapDk; mtH khDl tbtpy; nry;yhJ> md;gpd; kpFjpahy; tz;L tbtpy; nrd;wjhy; fw;G newpapy; gpiogl tha;g;Gfs; ,y;iy.

6.  rk;ge;jH tuyhw;wpy; fw;G newp:
tplk; ePf;fpa tuyhW:
     ghz;b ehl;Lj; jhkd; vDk; tzpfd; jd; ngz; kf;fs; vOtUs; xUj;jpia> Kiw top khkdhfpa xUtDf;Fj; jUtjhf thf;fspj;jpUe;jhd;. vdpDk; nry;t tsk; cilatHfs; te;J Nfl;Fk;NghJ kw;w MW ngz;fspy; xUj;jpiaf; $l Kiwtop thf;fspj;j kzhsDf;Fj; juhky; jd; thf;if kPwP te;J Nfl;ltHfSf;Fj; jpUkzk; nra;J nfhLj;jhd;. jd; je;ij Kiwtop khkid Vkhw;Wtij czHe;j VohtJ ngz; jd; je;ij nfhLj;j thf;Ff;Fg; nghWg;Gilatshf> cld;Nghf;F newpapy; Kiwtopj; jha; khkid kzf;f vz;zk; nfhz;L mtDld; jpUkUfy; jyj;ij mile;J> mq;Fs;s xU jpUklj;jpy; ,uT jq;fpdhs;.
je;ij nfhLj;j thf;iff; fhf;f Ntz;b gy;NtW vjpHg;GfisAk; kPwp ,uNthL ,uthf Xbte;J> jpUkUfy; jyj;jpy; cs;s jpUklj;jpy; jq;fpa mg;ngz;zpd; cld; te;j kzhsid xU ghk;G jPz;bajpy; mtd; ,we;jhd;. cld; te;jg; ngz;kfNsh jpf;fw;w epiyapy; ,iwtid epide;J Gyk;gpdhs;.
jpUkzk; Kbe;jpUe;jhy; $l njhl;lhtJ moKbAk;> jpUkUfy; ,iwth> vd; khkDld; vdf;F kzkhfhj fhuzj;jhy;  njhl;L mOk; ghf;fpak; $lf; fpilf;ftpy;iyNa. te;j ,lj;jpy; vdf;Fr; rjp NeHe;Jtpl;lJ vd;W Gyk;gpf; nfhz;bUe;jhs;. jpUkUfy; Myaj; juprdj;jpw;F te;jpUe;j jpUQhdrk;ge;jH mgiyapd; mOFwy; Nfl;L ,iwtidg; gzpe;jhH.



mgiyg; ngz;zpd; kzhsid kPl;f Ntz;bj; jpUTs;sk; nfhz;l jpUQhdrk;ge;jH ,iwtd; kPJ>
     rilah naDkhy; ruz;eP vDkhy;
     tpilah naDkhy; ntUth tpOkhy;
     kbahH Ftis kyUk; kUfy;
     cilaha; jFNkh ,tSz; nkypNt    (jpUQhdrk;ge;jH Njthuk;.jpUkUfy;:1)
vDk; gjpfj;ij; ghbdhH.  jpUkUfy; ciwAk; ngUkhd; rk;ge;jupd; gz; Rke;jg; ghly; Nfl;Lr; rpe;ij kfpo;e;J kzhsdhf te;j tzpf kfid capHg;gpj;jhH. tzpf kfSk; jpUQhdrk;ge;jupd; ghjk; gzpe;J gutpdhs;.
tzpfH kfd; kzhsd; Kiwapy; te;jtdhapDk;; muT jPz;ba epiyapd; MapDk;> capH gpupe;j epiyapd; MapDk>; jpUkzj;jpw;F Kd; mtidj; njhly; kugd;W vd xJq;fp epd;W mOJ Gyk;Gk; mgiyg; ngz;zpd; fhl;rpj; jkpoupd; fw;Gj;jpwj;jpw;Fr; rhd;whf mke;Js;sJ.
njhFg;Giu:
rkaq;fs; ahTk; kf;fis ed;ndwpg;gLj;Jk; tifapy; Njhd;wpaitNa. mt;tifapy; khz;GW kf;fisf; nfhz;l irtrkaj;jpd; xg;gpyh KK Kjw; guk;nghUshd <rdpd; mUs; jpwq;fis mbg;gilahff; nfhz;L gy;NtW mwq;fSk;> capupDk; rpwe;j xOf;fkhfpa fw;G newpfSk; czHj;jg;gl;Ls;sd
Ø  tpehafH gilg;G Fwpj;j fijapd; thapyhfg; ngz;bH jk; fw;Gnewpiaj; jhNk fhj;Jf;nfhs;Sk; jpwk; czHj;jg;gl;Ls;sJ.
Ø  <rdpd; jz;ltq;fs; rhHe;j epiyapd; thapyhf> fw;Gil khe;jH kPJ khw;whd; nka; jPz;ly; $lhJ> gz;ghl;il vj;jifa #oypYk; kPwf;$lhJ vDk; cz;ikfs; ntspg;gLj;jg;gl;Ls;sd.
Ø  fz;zg;gH tuyhw;wpd; top md;gpd; NkyPNl ,iwepiyia milAk; top vd;gJ Gyg;gLj;jg;gl;Ls;sJ.
Ø  gpUq;fp KdptH tuyhw;wpd; top epiyahd gf;jp> jLkhw;wkpy;yhj topghL cs;spl;l nra;jpfs; czHj;jg;gl;Ls;sd.
Ø  jpUQhdrk;ge;jupd; jpUkUfy; jyahj;jpiu epfo;it xl;b tzpf kfs; thapyhfj; jkpoH jk; gd;ghl;Lj; jpwk; ntspg;gLj;jg;gl;Ls;sJ. Mf irt rka ,yf;fpaq;fs; ahTk; jkpoH jk; caupa gz;ghl;ilg; gOJwhJ ghJfhf;Fk; ngl;lfq;fs; vd;gJ Gyg;gLfpd;wJ.
  Jiz epd;w E}y;fs;:                   
              1.   jpUf;Fws;.
              2.   rq;f ,yf;fpak;. fofg;gjpg;G> nrd;id.
              3.   gd;dpU jpUKiwfs;. nka;ag;gd; gjpg;gfk;> rpjk;guk;
              4.   fe;jGuhzk;. tpj;jpahE}gdae;jpurhiy> 1912.
         5. jpUf;flt+H jpUtPul;lj; jyGuhzk;.